ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள காலிப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்
விருதுநகர் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்: மூத்த ஆலோசகர் (Senior Counseller)
காலிப் பணியிடம்: 1
தகுதிகள்:
1. முதுநிலை சமூகப்பணி (சமூகவியல்/உளவியல்) பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
2. மகளிருக்கான வன்கொடுமை எதிர்த்து இயங்கும் அரசு அல்லது அரசு சாரா நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் அல்லது அதே அமைப்பிற்குள் அல்லது வெளியே ஆலோசனை வழங்கியதில் குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவம் தேவை.
3. 24/7 சுழற்சி முறையில் பணிபுரிய சம்மதிக்கும் நபர்கள்; மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
4. விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.
பதவியின் பெயர்: வழக்கு பணியாளர் (Case Worker)
காலிப் பணியிடம்: 2
தகுதிகள்:
1. இளநிலை /முதுநிலை சமூகப்பணி (சமூகவியல்/உளவியல்) பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
2. மகளிருக்கான வன்கொடுமை எதிர்த்து இயங்கும் அரசு அல்லது அரசு சாரா நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் அல்லது அதே அமைப்பிற்குள் அல்லது வெளியே ஆலோசனை வழங்கியதில் குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவம் தேவை.
3. 24/7 சுழற்சி முறையில் பணிபுரிய சம்மதிக்கும் நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
4. விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.
23.07.2024 -க்குள் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட சமூகநல அலுவலர்
மாவட்ட சமூகநல அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
விருதுநகர் மாவட்டம்.
0
Leave a Reply