அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சி
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் (11.07.2024) தருமபுரி பாளையம்புதூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மக்களுடன் முதல்வர் திட்டத்தை ஊரகப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி, 12,500 கிராம ஊராட்சிகளில், 2500 முகாம்களின் மூலம் 15 அரசுத்துறைகளின் வாயிலாக 44 சேவைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில், இன்று (11.07.2024) அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பாளையம்பட்டி கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம் தாகூர் அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இம்முகாமில், 41 பயனாளிகளுக்கு ரூ.28,00,000/- மதிப்பிலான சாலை விபத்து நிவாரணத்தொகையினையும், 11 பயனாளிகளுக்கு ரூ.2,77,590/- மதிப்பிலான இலவச வீட்டு மனைப் பட்டாக்களையும், 83 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும், 12 பயனாளிகளுக்கு உழவர் அட்டையினையும், 6 பயனாளிகளுக்கு வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்க அனுமதி ஆணைகளையும், 25 பயனாளிகளுக்கு ரூ.27,00,000/- மதிப்பில் ஆதி திராவிடர் நத்தம் இணையவழி பட்டாக்களையும் என மொத்தம் 178 பயனாளிகளுக்கு ரூ.57,77,590/-மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
0
Leave a Reply