25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jun 13, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் போட்டித்தேர்வுக்காக பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டு நிகழ்ச்சி விருதுநகர் சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில் 14.06.2024 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடத்தப்படவுள்ளது.போட்டித் தேர்வுக்காக பயிலும்/பயின்று வருகின்ற மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுவதற்கான ஆலோசனை கூட்டம் நடத்தப்படவுள்ளது.மேலும் விவரம் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தொலைபேசி எண்:04562-252068, தொடர்புக்கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 12, 2024

1433-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் (11.06.2024)  நடைபெற்றது.இதில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக் கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில் இந்த பசலி ஆண்டிற்கான 1433-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 11.06.2024 முதல் 21.06.2024 வரை என 10 வட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த் தீர்வாய அலுவலரால் நிறைவேற்றப்பட்டு வருகிறது.இந்த வருவாய் தீர்வாயத்தின் போது கிராம மக்கள் தங்களுக்கு சொந்தமான வேளாண் நிலத்தின் உடமைப் பட்டா, சிட்டா, அடங்கல் குறித்தான விவரங்கள் கேட்டு மனுக்கள் தரலாம். தங்கள் கிராமத்தில் உள்ள குறைகளை நீக்க முறையிடலாம். கல்வி, குடிநீர், நீர் பாசன வாய்க்கால், மயான வசதி, கழிவு நீர் சாக்கடை வசதி முதலிய தேவைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முறையிடலாம். சொந்த வீட்டு மனை இல்லாதவர்கள் இலவச மனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம். வீட்டு மனை மட்டும் உடையவர்கள் வீடு கட்ட அரசு கடன் மற்றும் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம். கிராம மக்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர் ஒய்வூதியம், இலவச அரசு காப்புறுதி அட்டை, வறட்சி நிவாரண நிதி கோருதல், நிலப் பட்டா மாற்றம், நிலப்பட்டா சர்வே எண்கள் மாற்றங்கள் தொடர்பாக வருவாய் தீர்வாயத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த் தீர்வாய அலுவலரால் நிறைவேற்றப்படும்.வெம்பக்கோட்டை வட்டத்தில், 11.06.2024 முதல் 14.06.2024 மற்றும் 18.06.2024 வரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில் 11.06.2024 முதல் 13.06.2024 வரை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையிலும், இராசபாளையம் வட்டத்தில் 11.06.2024 முதல் 14.06.2024 மற்றும் 18.06.2024 வரை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் விருதுநகர் அவர்கள் தலைமையிலும், சிவகாசி வட்டத்தில் 11.06.2024 முதல் 14.06.2024 மற்றும் 18.06.2024 வரை மாவட்ட வழங்கல் அலுவலர் விருதுநகர் அவர்கள் தலைமையிலும்,சாத்தூர் வட்டத்தில் 11.06.2024 முதல் 14.06.2024  மற்றும் 18.06.2024 வரை தனித் துணை ஆட்சியர் (முத்திரை) விருதுநகர் அவர்கள் தலைமையிலும், வத்திராயிருப்பு வட்டத்தில் 11.06.2024 முதல் 13.06.2024 வரை வருவாய் கோட்டாட்சியர் சிவகாசி அவர்கள் தலைமையிலும், விருதுநகர் வட்டத்தில்  11.06.2024 முதல் 14.06.2024  மற்றும் 18.06.2024 முதல் 20.06.2024 வரையிலும் வருவாய் கோட்டாட்சியர் சாத்தூர் அவர்கள் தலைமையிலும், அருப்புக்கோட்டை வட்டத்தில் 11.06.2024 முதல் 14.06.2024  மற்றும் 18.06.2024 முதல் 20.06.2024 வரை உதவி ஆணையர், (கலால்) விருதுநகர் அவர்கள் தலைமையிலும், காரியாபட்டி வட்டத்தில் 11.06.2024 முதல் 14.06.2024  மற்றும் 18.06.2024 முதல் 19.06.2024 வரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நல அலுவலர், விருதுநகர் அவர்கள் தலைமையிலும், திருச்சுழி வட்டத்தில்  11.06.2024 முதல் 14.06.2024 வரை மற்றும் 18.06.2024 முதல் 21.06.2024 வரை வருவாய் கோட்டாட்சியர், அருப்புக்கோட்டை அவர்கள் தலைமையிலும் நடைபெற்று வருகிறது.இந்த ஜமாபந்தியின் நோக்கமானது வருவாய் / கிராம கணக்குகள், நில ஆவணங்கள் கணக்கு, பயிர் கணக்கு போன்றவை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், புள்ளியியல்துறை அலுவலர்கள் எவ்வாறு பராமரித்து வருகின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.  மேலும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு இறுதி நாளன்று பெறப்பட்ட மனுக்களுக்கு பதில் மற்றும் ஆணைகள் வழங்கப்படும்.எனவே பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி, தங்களது கிராமத்திற்கான ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தங்களது மனுக்களை வழங்கி கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் வெம்பக்கோட்டை வட்டாட்சியர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jun 12, 2024

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு

சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பினை சீரமைத்தல் தொடர்பாக இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 47AA- ன் கீழான தமிழ்நாடு முத்திரை (சொத்துகளுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி தயாரிக்க மதிப்பீடு செய்தல், வெளியிடுதல் மற்றும் திருத்தியமைத்தலுக்காக மதிப்பீட்டு குழு ஏற்படுத்துதல்) விதிகள் 2010, விதிகளில் விதி 4(2) ன் படி மைய மதிப்பீட்டு குழு 26.04.2024-ல் நிர்ணயம் செய்த நெறிமுறை கோட்பாட்டிற்கு இணங்க விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் விவரங்கள் www.tnreginet.gov.in  என்ற இணையதள முகவரியில் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மீது ஏதேனும் ஆட்சேபணைகள் மற்றும் கருத்துரைகள் இருப்பின், அதனை 15 நாட்களுக்குள் மதிப்பீட்டு துணைக்குழு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Jun 12, 2024

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் செயல்பாடுகள், வழங்கப்படும் உணவுகள், அதன் தரம் குறித்து ஆய்வு

விருதுநகர் மாவட்டம், துலுக்கப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்(11. 06. 2024) முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் செயல்பாடுகள், வழங்கப்படும் உணவுகள், அதன் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், I A S. , அவர்கள் ஆய்வு செய்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

Jun 12, 2024

குழந்தை திருமணம் தடைச் சட்டம் - 2006 ன்படி, குழந்தை திருமண சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை

18 வயது நிறைவடையாத பெண்கள் குழந்தைகளாகவே கருதப்படுவர். அவ்வாறு  18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் நடைபெறுவதை தடை செய்வதே இச்சட்டத்தின் நோக்கமாகும்.  குழந்தை திருமணம் தொடர்பாக புகார்கள் 1098 அல்லது 181 மூலம் பெறப்பட்ட உடன் நடவடிக்கையாக குழந்தையின் விபரம் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் பணிபுரியும் சமூக நல களப்பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, களப்பணியாளர்கள், சைல்டு லைன் பணியாளர்கள், ஒருங்கிணைந்த சேவை மையம் வழக்கு பணியாளர்கள், ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ஆகியோர்களால் நேரடியாக குழந்தையின் இல்லத்திற்கு சென்று விசாரணை செய்யப்படும்.குழந்தை திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரங்களோ, திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்பட்டிருப்பின் உடனடியாக குழந்தையினை மீட்டு குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைக்கப்படும்.குழந்தை திருமணம் நடைபெற்றிருப்பின் குழந்தையினை திருமணம் செய்து கொண்ட மணமகன், மணமகனின் பெற்றோர், குழந்தையின் பெற்றோர் மற்றும் திருமணம் நடைபெறுவதற்கு உடந்தையாக இருந்த அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்.இளவயதில் கருவுற்ற குழந்தைகள் தொடர்பாக புகார் பெறப்படின் காரணமான நபர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்படும்வழங்கப்படும் தண்டனைகள் 18 வயது நிரம்பாத பெண் குழந்தையைத் திருமணம் செய்யும் ஆணுக்கு அதிக பட்சமாக 2 வருட கடும் சிறைத்தண்டனை அல்லது ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். குழந்தை திருமணத்தை நடத்தி வைப்போருக்கு 2 வருடம் கடும் சிறைத்தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இக்குற்றம் பிணையில் விடுவிக்க இயலாத குற்றமாகும். 18 வயது நிரம்பாத பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி கருவுற்ற நிலையில் கண்டறியப்பட்டின் காரணமான நபருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்கடந்த 01.05.2024 முதல் 31.05.2024 வரை இருபத்தி ஒன்று குழந்தை திருமணங்கள் தொடர்பாக புகார் பெறப்பட்டதை தொடர்ந்து அவற்றின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் 18 வயது பூர்த்தியடையாமல் கருவுற்ற பெண் குழந்தைகள் தொடர்பாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இரண்டு நபர்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Jun 11, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில்  (10.06.2024) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு,  முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.  மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.  முன்னதாக, விருதுநகர் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் 14 பயனாளிகளுக்கு தலா ரூ.96,011/- வீதம் ரூ.13,44,154/- மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனங்களையும், 3 பயனாளிகளுக்கு தலா ரூ.1,13,400/- வீதம் ரூ.3,40,200/- மின்கலம் பொருத்தப்பட்ட மூன்று சக்கர நாற்காலிகளையும், 10 பயனாளிகளுக்கு தலா ரூ.6,800/- வீதம் ரூ.68,400/- மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களையும் என மொத்தம் 27 பயனாளிகளுக்கு ரூ.17,52,754/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.பிரம்மநாயகம், உட்பட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jun 11, 2024

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், சிவஞானபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் (10.06.2024) பள்ளி கல்வித்துறை சார்பில், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.  ப.ஜெயசீலன்  I A S,அவர்கள் வழங்கினார்.

Jun 11, 2024

புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கோ அல்லது பழைய ஓட்டுநர் உரிமத்தினைப் புதுப்பிக்க....

மத்திய மோட்டார் வாகன விதி எண்.5-ன் படி 40 வயதிற்கும் மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெற்ற பின்னரே புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கோ  அல்லது பழைய ஓட்டுநர் உரிமத்தினைப் புதுப்பிக்கவோ இயலும்.மாநிலத்தின் ஒரு சில இடங்களில் தகுதி வாய்ந்த மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெறாமல், போலி மருத்துவர்களிடம் சான்றிதழ்கள் தயாரித்து சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்துள்ள நிகழ்வுகள் நடைபெற்று வந்துள்ளன. இது குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைத் தடுக்கும் விதமாக சாரதி மென்பொருளில் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் தங்களது இந்தியன் மருத்துவ கவுன்சிலின்  பதிவுச் சான்று எண்ணை பதிவேற்றம் செய்து, சாரதி மென்பொருளில் கேட்கப்படும் தங்களது கிளினிக்/மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து விவரங்களை ஒரு முறை பதிவேற்றம் செய்து கொண்டு தங்களது பெயரினை ஒரு முறை பதிவு செய்துகொள்ள வேண்டும்.         இதனைத் தொடர்ந்து, தங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணுக்கு வரும் கடவுச் சொல்லை உள்ளீடு செய்ய வேண்டும். இதனை முடித்த பின்பு அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்கள் சாரதி மென்பொருளைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர்களின் மருத்துவச் சான்றினை பதிவேற்றம் செய்வதற்கு அனுமதிக்கப்படும். மருத்துவர்கள் தங்களது விவரங்களை  முதலில் உள்ளீடு செய்து தங்களுக்கான சாரதி மென்பொருளில்  நுழைவினை ஒரு முறை உறுதி செய்துகொண்டால் போதுமானது. அவ்வாறு முறையாக சாரதி மென்பொருளில் பதிவு செய்து கொண்ட பின்னர் தொடர்ந்து விண்ணப்பதாரர்களுக்கான மருத்துவச் சான்றினை மருத்துவர்கள் எலக்ட்ரானிக் முறையிலேயே சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும்.எனவே இந்தியன் மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவர்கள் மட்டுமே சாரதி மென்பொருளை இனி பயன்படுத்தி விண்ணப்பதாரர்களுக்கான மருத்துவச் சான்றிதழினை மின்னணு வாயிலாக மட்டுமே பதிவேற்றம் செய்ய இயலும். இதன் மூலம் போலி மருத்துவர்கள் மூலம் வழங்கப்பட்ட மருத்துவச் சான்றிதழை முறைகேடாக பயன்படுத்தி வந்தது தடுக்கப்பட்டுள்ளது.இந்த சாரதி மென்பொருளில் மருத்துவர்கள் தங்களது விவரங்களை உள்ளீடு செய்வது குறித்தும் தங்களது பதிவுகளை உறுதி செய்வது குறித்தும் நாளை (11.06.2024) காலை 11.00 மணியளவில் மாநிலம் முழுவதிலுமுள்ள அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மூலம் ஒரு செயல்முறை விளக்கம் காண்பிக்கப்படும். அதில் கலந்துகொண்டு தங்களது பதிவுகளை இறுதி செய்யும் முறைகள் குறித்து மருத்துவர்கள் அறிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 10, 2024

திருவில்லிபுத்தூர்; நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள்

விருதுநகர் மாவட்டம்,  திருவில்லிபுத்தூர் நகராட்சியில்  நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள்  (08.06.2024) நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, திருவில்லிபுத்தூர் நகராட்சி மஜீத் நகர் பகுதியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.1.75 கோடி மதிப்பீட்டில்;  கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ள அறிவுசார் மையம் மற்றும் நூலகத்தையும்,திருவில்லிபுத்தூர் நகராட்சிக்குட்பட்ட மருத்துவர் காலனி FSTP வளாகத்தில், தூய்மை பாரத இயக்கத்தின்  கீழ், ரூ.42.50 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குப்பை கழிவுகளை தரம் பிரிக்கும் மையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதையும், மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, திருவில்லிபுத்தூர் ஆணையாளர் திரு.ராஜமாணிக்கம், வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Jun 10, 2024

மல்லிப்புதூர் ஊராட்சியில் சிறுவர்களுக்கான அரசு குழந்தைகள் இல்லத்தினை நேரில் சென்று ஆய்வு

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம்,  மல்லிப்புதூர் ஊராட்சியில், குழந்தைகள் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும்; சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S ,அவர்கள்  (08.06.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளின் கல்வி உணவு, இருப்பிடம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டது குறித்து குழந்தைகளிடம் கேட்டறிந்தார். பின்னர், குழந்தைகளின் தனித்திறன்கள், விளையாட்டு விருப்பங்கள் மற்றும் இதர தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.மேலும், பள்ளிக்கல்வித்துறையின் கலைத்திருவிழாவில் மாநில அளவில் இரண்டாம் இடம்  பெற்ற  சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்ல குழந்தைகள் பறை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.இந்த ஆய்வின் போது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு  அலுவலர் திருமதி க.அருள்செல்வி சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்ல குழந்தைகள் கண்காணிப்பாளர் திருமதி சி.திலகவதி குழந்தைகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

1 2 ... 48 49 50 51 52 53 54 ... 69 70

AD's



More News