25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Apr 18, 2024

தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் ஆகியவை ஊதியத்துடன் கூடிய விடுமுறை

வருகின்ற பாராளுமன்ற தேர்தல் நாளன்று  (19.04.2024) தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் ஆகியவை ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க  அறிவுறுத்தி விருதுநகர் மற்றும் சிவகாசி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அவர்களின் கூட்டறிக்கை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135பி-ன் படி தமிழ்நாட்டில் உள்ள  தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து  பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளன்று அவர்கள் வாக்களிக்க ஏதுவாக அன்றைய தினம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.எனவே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் வாக்கு பதிவு நாளான ஏப்ரல் 19ம் தேதி வெள்ளிக்கிழமை அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்க தவறும் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135பி-ன் படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இது குறித்து புகார் அளிக்க ஏதுவாக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே விடுமுறை அளிக்காத  தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மீது புகார்கள் இருப்பின் பொதுமக்கள்  மற்றும் தொழிலாளர்கள் கீழ்கண்ட கட்டுப்பாட்டு குழு அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என விருதுநகர்   தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Apr 18, 2024

மக்களவை பொதுத் தேர்தல் 2024 ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேர்தல்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் உள்ளது

மக்களவை பொதுத் தேர்தல் 2024, ஏப்ரல் 19 அன்று நடைபெறயுள்ளதை முன்னிட்டு தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் 20.03.2024 முதல் 27.03.2024 வரை நடைபெற்றது. 28.03.2024 அன்று வேட்பு மனு பரிசீலனை செய்யப்பட்டு, 30.03.2024  அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு  சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 195- திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 1,60,107 ஆண்கள், 1,65,332 பெண்கள், 37 இதர வாக்காளர்களும், 196- திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 1,35,309 ஆண்கள், 1,43,271 பெண்கள், 13 இதர வாக்காளர்களும், 204- சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,12,699 ஆண்கள், 1,18,559 பெண்கள், 59 இதர வாக்காளர்களும், 205- சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 1,13,988 ஆண்கள் 1,19,121 பெண்கள், 28 இதர வாக்காளர்களும், 206- விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 1,06,097 ஆண்கள் 1,11,158 பெண்கள், 46 இதர வாக்காளர்களும், 207- அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 1,05,017 ஆண்கள் 1,11,079 பெண்கள், 22 இதர வாக்காளர்களும் என மொத்தம் 7,33,217 ஆண்கள், 7,68,520 பெண்கள், 205 இதர வாக்களர்கள் என ஆக மொத்தம் 15,48,825 வாக்களர்கள் உள்ளனர்.விருதுநகர் மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1680 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 188 பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு உள்ளன.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் பதற்றமானவை என கண்டறியப்பட்ட 148 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவினை நேரடியாக கண்காணிக்கும் வகையில் 148 தேர்தல் நுண்பார்வையாளர்களும், கூடுதலாக 26 தேர்தல் நுண்பார்வையாளர்களும் என மொத்தம் 174 தேர்தல் நுண்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குபதிவு  பணிக்காக 195- திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 1460 வாக்குச்சாவடி அலுவலர்களும், 196- திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 1492 வாக்குச்சாவடி அலுவலர்களும், 204- சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1380 வாக்குச்சாவடி அலுவலர்களும், 205- சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 1350 வாக்குச்சாவடி அலுவலர்களும், 206- விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 1262 வாக்குச்சாவடி அலுவலர்களும், 207- அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 1243 வாக்குச்சாவடி அலுவலர்களும், என மொத்தம் 8187 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 4066 வாக்குபதிவு இயந்திரங்களும், 2033 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 2202 விவிபேட் (வாக்குப்பதிவு சரிபார்க்கும் இயந்திரம்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும், வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சுமார் 8000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.விருதுநகர் மக்களவைத் தொகுதியில் 156 மண்டல குழுக்களும், 54 தேர்தல் பறக்கும் படை கண்காணிப்புக் குழுக்களும், 54 நிலையான கண்காணிப்பு குழுக்களும், 6 வீடியோ கிராபர்களும்,  6  வீடியோ கண்காணிப்பு குழுக்களும், 6 கணக்கு குழுக்களும் பணியில் உள்ளனர்.தேர்தல் தொடர்பான புகார்களை கண்காணிக்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவு அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறையும், தேர்தல் கட்டுப்பாட்டு குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 1800 425 2166 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணிலும், 04562- 252100, 221301, 221302, 221303, மாவட்ட தேர்தல் தொடர்பு மையத்தை 1950, 0452-234600, என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.இந்திய தேர்தல் ஆணையத்தின் உடைய C-VIGIL  என்ற தொலைபேசி செயலியில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்கலாம்.மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, முதியோர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.எனவே, இந்த மக்களவைத் தேர்தல் 2024-ல் 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும், பணம்  மற்றும் பரிசு பொருட்கள் பெறாமல்  நேர்மையான முறையில் 100 சதவிகிதம் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Apr 18, 2024

அருப்புக்கோட்டை வட்டம், செட்டிக்குறிச்சி சௌடாம்பிகா பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவை  வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு உறுதிமொழி

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், செட்டிக்குறிச்சி சௌடாம்பிகா பொறியியல் கல்லூரியில்  (17.04.2024) மக்களவைத் தேர்தல்-2024 முன்னிட்டு, 100 சதவிகிதம் வாக்குப்பதிவை  வலியுறுத்தி நடைபெற்ற முதல்முறை மற்றும் இளம் வாக்காளர்களுடனான விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் , I A S, அவர்கள் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாணவியர்கள் எடுத்துக்கொண்டனர்.

Apr 18, 2024

அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் போட்டித் தேர்வு பயிற்சி கையேடு

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை CSI பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு நீட் போட்டித் தேர்வு பயிற்சி கையேட்டினை மாணவர்களுக்கு வழங்கினார்.

Apr 18, 2024

சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்களை ஒதுக்கீடு செய்யும் பணிகளை ஆய்வு

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில்  (17.04.2024) மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு வாக்கு சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்களை ஒதுக்கீடு செய்யும் பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Apr 17, 2024

தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா அழைப்பிதழ்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், கம்பிக்குடி ஊராட்சி, மந்திரி ஓடை கிராமத்தில் நரிக்குறவர் காலனியில் (16.04.2024) மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு, 100 சதவிகிதம் வாக்குபதிவை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S. அவர்கள், தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா அழைப்பிதழை வாக்களர்களுக்கு வழங்கி, ஏப்ரல்-19 அன்று தவறாமல் வாக்களிக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.விருதுநகர் மாவட்டத்தில், வருகின்ற மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதிவிகித வாக்குபதிவை எட்டுவதற்காக நாள்தோறும் வாக்களார்களை கவரும் வகையில் அரசுத்துறை மூலமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி, நேர்மையான மற்றும் 100 சதவிகிதம் வாக்குபதிவை வலியுறுத்தும் வகையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப. அவர்கள், தாம்பூல தட்டில் வெற்றிலை, பாக்குடன் தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா அழைப்பிதழை மந்திரி ஓடை கிராமத்தில் நரிக்குறவர் காலனியில் வசிக்கும் 54 நரிக்குறவர் குடும்பங்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கி, ஏப்ரல்-19 அன்று குடும்பத்தில் உள்ள 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாமல் வாக்களிக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.இந்திய தேர்தல் ஆணையத்தின் சின்னத்துடன் தேர்தல் திருவிழா, தேசத்தின் பெருவிழா மக்களவைத் தேர்தல் 2024 என்ற முகப்பு வாசகங்களுடன் பனை ஓலையில் அச்சிடப்பட்டுள்ள இந்த அழைப்பிதழில்,விருதுநகர் மக்களவை தொகுதி தேர்தல் திருவிழா அழைப்பிதழ்.“அன்புடையீர் வணக்கம். நிகழும் மங்களகரமான திருவள்ளுவராண்டு 2055 சித்திரை 6-ம் நாள் (19.4.2024) வெள்ளிக்கிழமை நலம்தரும் நன்னாளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் பாராளுமன்ற மக்களவை தேர்தல் திருவிழா, தங்கள் அருகாமையில் உள்ள வாக்குச் சாவடியில் நடைபெறுகிறது. நாள்- 19.04.2024 நேரம்: காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.மேலும், என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100 சதவீதம் தவறாமல் வாக்களிப்போம், இந்திய  தேர்தல் ஆணையத்தின் கைப்பேசி செயலிகள் குறித்த விவரங்கள், தேர்தல் தொடர்பான புகார்களுக்கு, தேர்தல் கட்டுப்பாட்டு  அறை எண்கள் 04562-252100, 04562-221301, கட்டணமில்லா தொலைபேசி எண்-1800 425 2166, வாக்காளர் சேவை மையம் 1950 ஆகிய தகவல்களும் இந்த அழைப்பிதழில் இடம் பெற்றுள்ளன.எனவே 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வருகின்ற மக்களவை தேர்தல் 2024 ஏப்ரல்-19 அன்று  தவறாமலும், பரிசுப்பொருட்கள், பணத்துக்கு  ஆட்படாமல் நேர்மையாகவும் வாக்களிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Apr 17, 2024

“என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற வாசகம் உள்ள மாவட்ட இலச்சினை வரையப்பட்ட கேக் வெட்டி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு, தேர்தல் நாளான ஏப்ரல்-19 அன்று பிறந்த நாளாக கொண்ட முதல் முறை மற்றும் இளம் வாக்காளர்களுக்கு “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற வாசகம் உள்ள மாவட்ட இலச்சினை வரையப்பட்ட கேக் வெட்டி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.மக்களவை பொதுத்தேர்தல் 2024 வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் தேர்தல் குறித்த விழிப்புணர்வு சென்றடையும் வகையில், பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த வகையில், இளம் தலைமுறை மற்றும் முதல்முறை வாக்காளர்களுக்கு வினாடி வினா, கலந்துரையாடல் நிகழ்ச்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், காபி வித் கலெக்டர், கபாடி, மாரத்தான், போட்டோ பாயிண்ட், செல்பி ஸ்டாண்ட், கையெழுத்து இயக்கம், விழிப்புணர்வு பேரணி, வாக்களிப்பதன் அவசியம் குறித்து தொலைபேசியில் இலச்சினை ஒட்டுதல், இருசக்கர வாகன பேரணி, மிதி வண்டி பேரணி,  உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக தேர்தல் நாளான ஏப்ரல்-19 அன்று பிறந்த நாளாக கொண்ட முதல் முறை மற்றும் இளம் வாக்காளர்கள் 30 நபர்கள் கலந்து கொண்டு “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற வாசகம் உள்ள மாவட்ட இலச்சினை வரையப்பட்ட கேக் வெட்டி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.இந்த ஜனநாயக திருவிழாவில் 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும், வாக்களிப்பதன் மூலம் தங்களது பங்களிப்பை வழங்கி மாவட்டத்தில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு இலக்கை அடைய ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்ஃ மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Apr 17, 2024

தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா அழைப்பிதழை திருநங்கை, மாற்றுத்திறனாளி மற்றும் மூத்த வாக்களர்களுக்கு வழங்கி அழைப்பு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(16.04.2024) மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு, 100 சதவிகிதம் வாக்குபதிவை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப. அவர்கள், தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா அழைப்பிதழை திருநங்கை, மாற்றுத்திறனாளி மற்றும் மூத்த  வாக்களர்களுக்கு வழங்கி, ஏப்ரல்-19 அன்று தவறாமல் வாக்களிக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.விருதுநகர் மாவட்டத்தில், வருகின்ற மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதிவிகித வாக்குபதிவை எட்டுவதற்காக நாள்தோறும் வாக்களார்களை கவரும் வகையில் அரசுத்துறை மூலமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேர்மையான மற்றும் 100 சதவிகிதம் வாக்குபதிவை வலியுறுத்தும் வகையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S. அவர்கள், தாம்பூல தட்டில் வெற்றிலை, பாக்குடன் தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா அழைப்பிதழை திருநங்கை, மாற்றுத்திறனாளி மற்றும் மூத்த  வாக்களர்களுக்கு வழங்கி, ஏப்ரல்-19 அன்று குடும்பத்தில் உள்ள 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாமல் வாக்களிக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.இந்திய தேர்தல் ஆணையத்தின் சின்னத்துடன் தேர்தல் திருவிழா, தேசத்தின் பெருவிழா மக்களவைத் தேர்தல் 2024 என்ற முகப்பு வாசகங்களுடன் பனை ஓலையில் அச்சிடப்பட்டுள்ள இந்த அழைப்பிதழில்,விருதுநகர் மக்களவை தொகுதி தேர்தல் திருவிழா அழைப்பிதழ்.“அன்புடையீர் வணக்கம். நிகழும் மங்களகரமான திருவள்ளுவராண்டு 2055 சித்திரை 6-ம் நாள் (19.4.2024) வெள்ளிக்கிழமை நலம்தரும் நன்னாளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் பாராளுமன்ற மக்களவை தேர்தல் திருவிழா, தங்கள் அருகாமையில் உள்ள வாக்குச் சாவடியில் நடைபெறுகிறது. நாள்- 19.04.2024 நேரம்: காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.மேலும், என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100 சதவீதம் தவறாமல் வாக்களிப்போம், இந்திய  தேர்தல் ஆணையத்தின் கைப்பேசி செயலிகள் குறித்த விவரங்கள், தேர்தல் தொடர்பான புகார்களுக்கு, தேர்தல் கட்டுப்பாட்டு  அறை எண்கள் 04562-252100, 04562-221301, கட்டணமில்லா தொலைபேசி எண்-1800 425 2166, வாக்காளர் சேவை மையம் 1950 ஆகிய தகவல்களும் இந்த அழைப்பிதழில் இடம் பெற்றுள்ளன.எனவே18வயதுபூர்த்திஅடைந்தஅனைவரும்வருகின்றமக்களவைதேர்தல்2024ஏப்ரல்-19அன்றுதவறாமலும்,பரிசுப்பொருட்கள்,பணத்துக்குஆட்படாமல்நேர்மையாகவும்வாக்களிக்கவேண்டும்எனமாவட்டதேர்தல்நடத்தும்அலுவலர்,மாவட்டஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Apr 17, 2024

தொழிலாளர்களுக்கு தேர்தல் தினத்தன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படாதது தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்

தமிழ்நாடு அரசு மக்களவை பொதுத் தேர்தல் 2024 மற்றும் விளவன்கோடு சட்டமன்ற இடைத் தேர்தல் வருகின்ற 19.04.2024 அன்று  நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் அனைத்து வகை பணியாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.அதன் அடிப்படையில் சென்னை, தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் சென்னை, தொழிலாளர் ஆணையர் டாக்டர் அதுல் ஆனந்த், I A S., அவர்களால், தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் உட்பட அனைத்து  பொதுத்துறை மற்றும் தனியார்  நிறுவனங்களில் பணிபுரியும்  தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும், வாக்களிக்கும் பொருட்டு வாக்கு பதிவு நாளான 19.04.2024 (வெள்ளிக் கிழமை) அன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..மேலும் கர்நாடக அரசு மக்களவை பொதுத் தேர்தலானது 26.04.2024 மற்றும் 07.05.2024 ஆகிய 2 நாட்கள் நடைபெறுவதால் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அனைத்து வகை பணியாளர்களுக்கும் வாக்களிக்கும் பொருட்டு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வர்த்தகர் சங்கங்;களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்டத்தில், தேர்தல் தினமான 19.04.2024 அன்று மேற்படி தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காதது தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு ஏதுவாக விருதுநகர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில், அவரது ஆட்சி எல்கைக்குட்பட்ட பகுதிகளுக்கான தேர்தல் கட்டுப்பாட்டு அறை விருதுநகர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள விருதுநகர், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.தொழிலாளர்களுக்கு தேர்தல் தினத்தன்று ஊதியத்துடன் கூடிய  விடுமுறை அளிக்கப்படாதது தொடர்பான புகார்களை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலக தொலைபேசி எண்- 04562 - 252 130, District Nodal Officer / தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) விருதுநகர், 9445398763, 9865254003, உறுப்பினர் - தொழிலாளர் துணை ஆய்வாளர், விருதுநகர்- 8939862505, உறுப்பினர் - முத்திரை ஆய்வாளர், விருதுநகர்- 9159443377 ஆகிய தொலைபேசி எண்களில்  தெரிவிக்கலாம் என விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்)    திருமதி.சீ.மைவிழிச்செல்வி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Apr 16, 2024

சங்கரா கண் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகில் (15.04.2024) மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு, நேர்மையான மற்றும் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி சங்கரா கண் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் துவக்கி வைத்தார்.மக்களவை பொதுத்தேர்தல் 2024 வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய வாக்காளர்கள், அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறும் வகையில் மாவட்டத்திலுள்ள ஊரகம், நகர்புறம், பேரூராட்சிகள், மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் பெயருள்ள அனைவரும் 100 சதவீதம் தவறாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும். உலகத்தினுடைய மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவாக இந்திய பாராளுமன்றம் தேர்தல் நடைபெறுகிறது. உலக ஜனநாயக நாடுகளில் ஏறத்தாழ 96 கோடி வாக்காளர்களைக் கொண்ட மிகப்பெரிய நாடு இந்தியா தான்.எனவே அந்த 96 கோடி மக்களும் வாக்களிக்க வருவதும் நேர்மையாக வாக்களிப்பதும் ஜனநாயகத்தின் உடைய மிக அடிப்படையான ஒரு செயல். அதில் அனைவரும் ஈடுபடுத்திக் கொண்டு இந்த தேர்தலை வெற்றிகரமாகவும் நியாயமாகவும் நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.மேலும், கிருஷ்ணன்கோவில் சங்கரா மருத்துவமனை சார்பில் மக்களவை பொதுத்தேர்தல் 2024 ஏப்ரல்-19 அன்று தவறாமல் வாக்களிப்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கண் பரிசோதனை செய்வோர் தேர்தலில் வாக்களித்திருந்தால் அவர்களுக்கு 19.04.2024 மற்றும் 20.04.2024 ஆகிய நாட்களில் 50 சதவிகிதம் கட்டண சலுகை வழங்குவதாக அறிவித்துள்ளது பாராட்டுக்குறியது என தெரிவித்தார்.இந்த ஜனநாயக திருவிழாவில் 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும், வாக்களிப்பதன் மூலம் தங்களது பங்களிப்பை வழங்கி மாவட்டத்தில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு இலக்கை அடைய ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சியர்  அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 58 59 60 61 62 63 64 ... 69 70

AD's



More News