LPG Gas, E-KYC-ஐ வீட்டில் இருந்தே செய்யலாம் கேஸ் சிலிண்டர் அப்டேட்
பலர் கேஸ் ஏஜென்சிகளுக்குச் சென்று தங்கள்KYC விவரங்களைத் தருகிறார்கள். இருப்பினும்,EKYCஐ வீட்டிலிருந்தும் ஆன்லைனிலேயே முடித்துவிட முடியும். இது கடினம் அல்ல. மிக எளிது.. முதலில் www.mylpg.in தளத்திற்கு செல்லவும்.
அங்கே வலது பக்கத்தில் பாரத் கேஸ்/HP கேஸ்/இண்டேன் சிலிண்டர் என்ற ஆப்ஷன்களை காண்பீர்கள். அதை கிளிக் செய்யவும்.
அதன் பிறகு தொலைபேசி எண்ணுடன் உள்நுழையவும். உங்கள்KYC புதுப்பிக்கப்பட்டதா இல்லையா என்பதை அங்கு நீங்கள் சரிபார்க்கலாம். உங்கள் விவரங்கள் தெரியவில்லை என்றால்,needkyc என்பதைக் கிளிக் செய்தால், கேஒய்சி படிவம் தோன்றும். அதை நிரப்பி உங்களுக்கு கேஸ் சிலிண்டர் கிடைக்கும் ஏஜென்சியிடம் கொடுங்கள்.
ஆன்லைனில் படிவத்தைச் சமர்ப்பித்த நான்கு முதல் ஐந்து நாட்களுக்குள் உங்கள்KYC செயல்முறை முடிவடையும். அதன் பிறகு மானிய விலையில் சிலிண்டர் பெற வாய்ப்பு உள்ளது. KYC ஏற்கனவே செய்திருந்தால் பிரச்சனை இல்லை.
0
Leave a Reply