வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள்
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (01.06.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் களத்தூர் கிராமத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், தலா ரூ.2.78 இலட்சம் மதிப்பில் 64 வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், மூவரைவென்றான் ஊராட்சியில் அயோத்தி தாஸ் பண்டிதர் திட்டத்தின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு வருவதையும், துலுக்கப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.20 இலட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருவதையும், முத்துக்குமாரபுரம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.80 இலட்சம் மதிப்பில் கதிர் அடிக்கும் களம் அமைக்கப்பட்டு வருவதையும்,ராமசந்திராபுரம் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழா பெருமளவு மரக்கன்றுகள் நடப்படும் திட்டத்தின் கீழ் ரூ.4 இலட்சம்; மதிப்பில் 800 மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதையும், 15-வது மானிய நிதி குழு திட்டத்தின் கீழ், ரூ.3.46 இலட்சம் ஆழ்துளைக் கிணறு மற்றும் பைப்லையன் அமைக்கப்பட்டு வருவதையும்,வலையபட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.30.10 இலட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.
0
Leave a Reply