எளிமையான வீட்டில் வாழும் உலகின் பணக்காரர் எலான் மஸ்க்.
உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் முதலிடத்தில் இருக்கும் எலான் மஸ்க், பல லட்சம் கோடி ரூபாய் சொத்துகளை வைத்திருந்தாலும் மிகவும் எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறார்.
ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா, நியூராலிங்க், தி போரிங் கம்பெனி, xAI மற்றும் எக்ஸ் (X) போன்ற முன்னணி நிறுவனங்களின் தலைவரான அவர், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் போகா சிகா பகுதியில் உள்ள சுமார் 400 சதுர அடி பரப்பளவு கொண்ட சிறிய வீட்டில் வசித்து வருகிறார்.
அந்த வீட்டில் வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை மற்றும் குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மட்டுமே உள்ளன. அபரிமிதமான செல்வம் இருந்தும் எளிமையான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
0
Leave a Reply