தமிழக கிரிக்கெட் சங்கம் (டி.என். சி.ஏ.,) சார்பில் டி.என்.பி.எல்., தொடர் 9வது சீசன்.
தமிழக கிரிக்கெட் சங்கம்(டி.என். சி.ஏ.,) சார்பில் டி.என்.பி.எல்., தொடர் ,9வது சீசன் இன்று கோவையில் துவங்குகிறது.இதில் நடப்பு சாம்பியன்' திண்டுக்கல், சென்னை, கோவை, நெல்லை, மதுரை, சேலம், திருப்பூர், திருச்சி என 8 அணிகள் பங்கேற்கின்றன.
இதற்கான போட்டிகள் கோவை(ஜூன் 5,11), சேலம்(ஜூன் 13,19), நெல்லை(ஜூன் 21,26), திண்டுக்கல்(ஜூன் 28ஜூலை 6) என 4 இடங்களில் நடக்கின்றன.கோவையில் இன்று நடக்கும் முதல் லீக் போட்டியில் திண்டுக்கல், கோவை அணிகள் மோதுகின்றன
பிரிமியர் தொடரின் 18 ஆண்டு வரலாற்றில் முதன் முறையாக பெங்களூரு சாம்பியன் ஆனது. சின்னசாமி மைதானத்தில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. மைதானத்தில் ரசிகர்கள் நிரம்பி வழிந்தனர். இதில் கோலி பேசியது: உங்களிடம் பேசுவதற்கு அதிக நேரமில்லை. ஏனெனில் பிரிமியர் கோப்பையை முதலில் உங்களிடம் காட்டவேண்டும். எங்களது கேப்டன் ரஜத் படிதர் கூறியது போல, இனிமேல் ஈ சாலா கப் நம்தே' அல்ல,'ஈ சாலா கப் நம்து'(இந்த கோப்பை நமக்கு சொந்த மானது). இதை வெற்றிகரமாக செய்து முடித்து விட்டோம். இது அணியின் வீரர்களுக்காக அல்லது என்னைப் போல 18 ஆண்டுகளாக அணியில் இருக்கும் ஒருவருக்காக அல்ல, இந்த வெற்றி அனைத்தும் உங்களுக்கானது. இந்த மக்களுக்கானது என்றார்.
0
Leave a Reply