உடல்நல குறைவால் ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் .
நடிகர் தர்மேந்திரா 1960ல் வெளியான தில் பி தேரா ஹம் பி தேரே என்ற ஹிந்தி திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமான இவர், 60 ஆண்டுகளுக்கு மேலாக பல படங்களில் நடித்து வந்தார். ஹிந்தி திரைப்படத் துறையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர்இவர் நடிப்பில் வெளியான ஷோலே ஹிந்தி படம், மிகப்பெரிய அளவில் ஹிட்டானதை அடுத்து நாடு முழுதும் தர்மேந்திரா பிரபலமானார். பிலிம்பேர் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள தர்மேந்திரா, பா.ஜ., சார்பில் ராஜஸ்தானின் பிகானேர் தொகுதியில் இருந்து லோக்சபா எம்.பி.,யாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
300க்கும் மேற் பட்ட படங்களில் நடித்துள்ள இவர், ஹிந்தி சினி மாக்களில் அதிக ஹிட் படங்களை தந்த ஹீரோ என்ற சாதனையையும் படைத்துள்ளார். தர்மேந்திரா நடிப்பில் உருவான இக்கீஸ் படம், அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. பிலிம்பேர் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள தர்மேந்திரா, பா.ஜ., சார்பில் ராஜஸ்தானின் பிகானேர் தொகுதியில் இருந்து லோக்சபா எம்.பி.,யாகவும் தேர்வு செய்யப்பட்டார். 2012ல், நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷண் வழங்கி அப்போதை மத்திய அரசு கவுரவித்தது.
இந்நிலையில், சமீபத்தில் உடல்நலக் குறைவால், சுவாசக் கோளாறு மற்றும் இதயநோய் காரணமாக தர்மேந்திரா உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
0
Leave a Reply