25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இசைக்குயில் எஸ். ஜானகி மறைவு: இசை உலகின் பொற்காலம் முடிந்தது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இசைக்குயில் எஸ். ஜானகி மறைவு: இசை உலகின் பொற்காலம் முடிந்தது.

தென்னிந்திய திரையுலகின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகியும், ரசிகர்களால் 'இசைக்குயில்' என்று போற்றப்பட்டவருமான எஸ். ஜானகி (88), உடல்நலக்குறைவு காரணமாக கர்நாடக மாநிலம் மைசூருவில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1938 ஏப்ரல் 23-ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் ராமமூர்த்தி – சத்தியவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்த ஜானகி, சிறுவயதிலேயே இசையில் ஆர்வம் கொண்டு நாதஸ்வர மேதை பைடிசாமியிடம் முறையாக இசை பயின்றார். 1956-ஆம் ஆண்டு வானொலி இசைப் போட்டியில் வெற்றி பெற்று, அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்திடம் பரிசு பெற்றது, அவரது இசைப் பயணத்தின் முக்கிய தொடக்கமாக அமைந்தது.

திரையுலகில் அறிமுகமான முதல் ஆண்டிலேயே ஆறு மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கவனம் ஈர்த்தார். 'கொஞ்சும் சலங்கை' திரைப்படத்தில் எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையில் அவர் பாடிய 'சிங்கார வேலனே தேவா' பாடல், இன்று வரை தமிழ் இசையின் காலத்தால் அழியாத பாடல்களில் ஒன்றாக திகழ்கிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 17 மொழிகளில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி, இந்திய இசை வரலாற்றில் தனக்கென அழியாத முத்திரை பதித்தார். குழந்தையின் மழலைக் குரல் முதல் முதியவரின் குரல் வரை பல்வேறு குரல் வடிவங்களில் பாடும் அபார திறமை அவருக்கே உரியது.

நான்கு முறை தேசிய விருது பெற்ற ஜானகி, தமிழில் 'செந்தூரப்பூவே...' (பதினாறு வயதினிலே) மற்றும் 'இஞ்சி இடுப்பழகா...' (தேவர் மகன்) உள்ளிட்ட பாடல்களுக்காக தேசிய அங்கீகாரம் பெற்றார். 2013-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதை ஏற்க மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும், கேரள அரசு விருது 11, ஆந்திர அரசு விருது 9, தமிழக அரசு விருது 6, ஒடிசா அரசு விருது 1, பிலிம்பேர் விருதுகள் 20 மற்றும் இலங்கையின் 'ஞான கான சரஸ்வதி' உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

2016-ஆம் ஆண்டு பாடகியாக இருந்து ஓய்வு பெற்ற எஸ். ஜானகி, தனது இனிமையான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார். அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News