மீண்டும் தமிழ் சினிமாவில் உபேந்திரா!
பிரபல கன்னட நட்சத்திரமான உபேந்திரா, தமிழில் 'சத்யம்' படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ரஜினிகாந்தின் 'கூலி' படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தார்.
தற்போது இவர் குறித்து ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இப்போது புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதற்கு அடுத்தபடியாக, நடிகர் அதர்வா நடிப்பில் ஒரு அதிரடி (Action) கதையை இயக்கவுள்ளார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆக்ஷன் படத்தில், ஒரு வெயிட்டான கதாபாத்திரத்தில் நடிக்க உபேந்திரா கமிட்டாகியுள்ளார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0
Leave a Reply