'காந்தாரா சாப்டர் 1' பட வெற்றியை தொடர்ந்து ரிஷப் ஷெட்டியின் ஆன்மிக பயணம் .
ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான 'காந்தாரா சாப்டர் 1' உலகளவில் ரூ.818 கோடி வசூலித்துள்ளது. 2025ல் இந்திய படங்களில் அதிகம் வசூல் செய்ததாக இப்படம் முதலிடத்தை பெற்றுள்ளது. பட வெற்றியை தொடர்ந்து ரிஷப் ஷெட்டி, மைசூரில் உள்ள சாமுண்டி மலையிலிருந்து ஆன் மிக பயணத்தை துவங்கியுள்ளார். தொடர்ந்து நஞ்சனகுடு கண்டேஸ்வரர் கோயில், தக்ஷன காசி, வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் சென்ற ரிஷப், பின்னர் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்றும் தரிசனம் செய்துள்ளார்.
0
Leave a Reply