விளையாட்டு போட்டிகள் 14th OCTOBER 2025
பெண்களுக்கான இந்தியன் ஓபன் கோல்ப் தொடர் ஹரியானாவில் நடந்தது.இந்தியாவின் ஹிட்டாஷீபக்சி, 283 'ஸ்டிரோக்' பெற்று, மூன்றாவது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீராங்கனை பிரனவி (284) 4வது இடம் பெற்றார். சிங்கப்பூரின் ஷனான் (281), இங்கிலாந்தின் அலைஸ் (282) முதல் இரு இடம் பெற்றனர்.
பிரைம் வாலிபால் லீக், நான்காவது சீசன் இந்தியாவின் ஐதராபாத்தில் நடக்கிறது.மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதன் லீக் போட்டி யில் ஆமதாபாத் அணி 3-2 என்ற (9:15, 7:15, 15:9, 15:11, 15:8) கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் டில்லி அணி 3-0 என (15:11, 15:9, 15:11) கேரளா (கோழிக் கோடு) அணியை வென்றது.
இன்று ஓடென்ஸ் நகரில் டென்மார்க்ஓபன் பாட்மின்டன் தொடர் துவங்குகிறது. இந்தியா சார்பில் ஆண்கள் ஒற்றையரில் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டி, பெண்கள் ஒற்றையரில்அன்மோல், ஆண்கள் இரட்டையரில் ச சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி களமிறங்குகின்றனர்.
0
Leave a Reply