சர்வதேச சாலஞ்ச் பாட்மின்டன் தொடர்.
சர்வதேச சாலஞ்ச் பாட்மின்டன் தொடர்துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில், இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருணன் (தமிழகம்) அர்ஜுன் (கேரளா) ஜோடி, ஜப்பானின்யுடோநோடா, ஷுன்யாஓடாஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை இந்திய ஜோடி 21-13,. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடி, 21-6 என வசப்படுத்தியது. 29 நிமிடம் மட்டும் நடந்த பைனலில் இந்திய ஜோடி 21-1 21-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.
இந்தியவின் ஹரிஹரன் அம்ச கருணன், திரீஷா ஜோடி, இந்தோனேஷியாவின் நாஹ்யா முக்யிபா, நவாப் ஜோடியை கலப்பு இரட்டைய பிரிவு பைனலில் சந்தித்தது. இந்திய ஜோடி 52 நிமிடம் நடந்த பைனலில் 21-14, 18– 21, 21-11 என வென்று கோப்பை வென்றது.
0
Leave a Reply