30 ஆண்டுகளுக்கு பின் செஸ் ஜாம்பவான்கள் ஆனந்த், காஸ்பரோவ் மோத உள்ளனர்.
முன்னாள் உலக சாம்பியன்கள் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 53. ரஷ்யா வின்கேரி காஸ்பரோவ் 62, மோதும் 'கிளச்' செஸ் தொடர் அமெரிக்காவில்
நவீன மயமாக்கப்பட்ட செயின்ட் லூசியா செஸ் கிளப்பில் மூன்று நாள் நடக்கும். இத்தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.1.28 கோடி.
காஸ்பரோவ் ஆறு முறை (1985, 1986, 1987, 1990, 1993, 1995) உலக சாம்பியனாக ஆதிக்கம் செலுத்தினர்
செஸ் அரங்கில் ஆனந்த் ஐந்து முறை (2000, 2007, 2008, 2010, 2012), உலக சாம்பியனாக ஆதிக்கம் செலுத்தினர்
1995 இல் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் மோதினர். நியூயார்க்கின் பழைய உலக வர்த்தக மையத்தின் 107வது மாடியில் இருவரும் மோதிய இப்போட்டியில் காஸ்பரோவ் சாம்பியன் ஆனார்.
மொத்தம் 12 போட்டி முடிவில் முதலிடம் பெறும் வீரருக்கு ரூ.62 லட்சம் பரிசு கிடைக்கும். இரண்டாவது இடம் பெற் றால் ரூ. 44 லட்சம் தரப்படும். ஒருவேளை இருவரும் சம புள்ளி பெற்றால், தலா ரூ. 53 லட்சம் என சமமாக வழங்கப்படும்.
0
Leave a Reply