ஆண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 12வது சீசன் இந்தியா வெற்றி.
ஆண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 12வது சீசன்நேற்று பீஹாரின் ராஜ்கிர் நகரில் துவங்கியது. இந்தியா, 'நடப்பு சாம்பியன்' தென் கொரியா, மலேசியா, கஜகஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன.
உலகத் தரவரிசையில் 7வது இடத்திலுள்ள இந்திய அணி 'ஏ' பிரிவில், சீனா, ஜப்பான் (ஆக. 31), கஜகஸ்தான் (செப்.1) அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. நேற்று தனது முதல் போட்டியில் 23வது இடத்திலுள்ள சீனாவை சந்தித்தது.
போட்டியின் 47 வது நிமிடம் இந்தியாவுக்கு ''பெனால்டி கார்னர்' கிடைத்தது. இம்முறை ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்து உதவினார். இது ஹர்மன்பிரீத் அடித்த 'ஹாட்ரிக்' கோல் ஆனது. முடிவில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
0
Leave a Reply