லக்னோவில் நிலவிய அடர்ந்த பனிப்பொழிவு காரணமாக வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடக்க இருந்த கிரிக்கெட் போட்டி ரத்து.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டி முடிவில் இந்தியா 2-1 என முன்னிலையில் இருந்தது. நான்காவது போட்டி உ.பி., தலைநகர் லக்னோவில் உள்ள வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடக்க இருந்தது.
ஆனால் லக்னோவில் நிலவிய அடர்ந்த பனிப்பொழிவு காரணமாக, வேறு வழியில்லாத நிலையில், நான்காவது போட்டியை ரத்து செய்வதாக அம்பயர்கள் அறிவித்தனர். ஐந்தாவது, கடைசி போட்டி நாளை ஆமதாபாத்தில் நடக்க உள்ளது.
மும்பையில் இந்திய கிரிக்கெட்ஜாம்பவான் சச்சினுடன், பார்வையற்றோருக்கான 'டி-20' உலக கோப்பை வென்ற இந்திய பெண்கள் அணியினர்'குரூப்' போட்டோ எடுத்துக் கொண்டனர்.
0
Leave a Reply