வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி(எம்.ரெட்டியபட்டி) ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், மாநில திட்டக்குழுவின் சார்பில், வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் பின்தங்கிய வட்டாரங்களான திருச்சுழி மற்றும் நரிக்குடி வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில்(12.08.2025) நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி மற்றும் நரிக்குடி ஆகிய வட்டாரங்கள் வளமிகு வட்டார வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும், பின்தங்கிய வட்டாரங்கள் இனம் காணப்பட்டு அந்த வட்டாரங்களின் வளர்ச்சிக்காக வளர்ச்சி திட்;டத்தை உருவாக்கி, அதற்கான மூன்று ஆண்டுக்கான செயல் திட்டத்தை உருவாக்கப்பட்டு, அந்த செயல் திட்டத்தை மூன்று நிதி ஆண்டுக்கான அறிக்கையாக மாற்றி, அதன்பிறகு திட்டப்பணிகளுக்கான அடிப்படை கட்டமைப்புகளையும் உருவாக்கும் நோக்கத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.உடல்நலம் மற்றும் ஊட்டசத்து, சமூக நலன், கல்வி, திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு, வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த சேவைகள் பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட 7 தலைப்புகளின் கீழ் 131 வளர்ச்சி குறியீடுகளை (Key Developmental Indicators) (KDI’s) அடிப்படையாக கொண்டு வட்டார அளவிலான திட்டம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் திருச்சுழி மற்றும் நரிக்குடி வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், 2025 ஆம் ஆண்டிற்கான வட்டார ஆண்டுத்திட்டம் தயாரிக்கும் பொருட்டு பணிகள் தேர்வு செய்யப்பட்டது.இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர் திரு.வீ.கேசவதாசன், மாவட்ட திட்ட அலுவலர் திரு.முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply