பெண்களுக்கான உலக கோப்பை செஸ்: பைனலில் ஹம்பி!
பெண்களுக்கான உலக கோப்பை செஸ் தொடர்ஜார்ஜியாவில், நடக்கிறது. இதன் அரையிறுதியில் இந்தியாவின் திவ்யா, சீனாவின் ஜோங்கியை வீழ்த்தி, முதன் முறையாக பைனலுக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் கொனேரு ஹம்பி, சீனாவின் லெய்டிங்ஜீ மோதினர். இரண்டு போட்டிகளின் முடிவில் ஸ்கோர் 1.0,1.0 என சம நிலையில் இருந்தது.நேற்று,'டை பிரேக்கர்' நடந்தது. இதன் முதல் போட்டியில் விளையாடிய ஹம்பி, 65வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். இரண்டாவது போட்டியில் களமிறங்கிய ஹம்பி, 39வது நகர்த்தலில் வெற்றி பெற, 2.0-2.0 என மீண்டும் சம நிலை வகித்தது.
அடுத்த 4 போட்டியில்,3ல் ஹம்பி, முடிவில் 5.0,3.0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார். நாளை துவங்கவுள்ள பைனலில் இந்தியாவின் ஹம்பி, திவ்யா மோதுகின்றனர். உலக கோப்பை பைனலுக்கு முதன்முறையாக இரண்டு இந்திய வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்.
0
Leave a Reply