கிரிக்கெட்'ஆண்டர்சன் சச்சின் டிராபி' டெஸ்ட்தொடர்.
ஐந்து போட்டிகள் கொண்ட 'ஆண்டர்சன் சச்சின் டிராபி' டெஸ்ட்தொடரில் இங்கிலாந்து சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி பங்கேற்கிறது. மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து, 2-1 என முன்னிலையில் உள்ளது. நேற்று, 4வது டெஸ்ட் மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் துவங்கியது. தொடரை கைப்பற்றும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள, இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது.
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், 'பவுலிங்' தேர்வுசெய்தார். இந்தியஅணிமுதல்இன்னிங்சில், 4 விக்கெட்டுக்கு 264 ரன் எடுத்திருந்தது. போதிய வெளிச்சமின்மையால் முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது.
0
Leave a Reply