செஸ் ஆண்கள் கிராண்ட் செஸ் தொடரின் மூன்றாவது தொடர் குரோஷியாவில் நடந்தது
ஆண்கள் கிராண்ட் செஸ் தொடரின் மூன்றாவது தொடர் குரோஷியாவில் நடந்தது
கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசன் மொத்தம் 5 தொடர் இதன் மூன்றாவது தொடர் குரோஷியாவில் நடந்தது. இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் உட்பட 10 பேர் பங்கேற்றனர். முதலில் நடந்த 'ரேபிட்' முறையிலான போட்டியில் குகேஷ், 14 புள்ளியுடன் முதலிடம் பிடித்தார்.
அடுத்து 'பிளிட்ஸ்' (அதிவேகம்) முறையில் போட்டி நடந்தது. இதில் கார்ல்சன் 12.5 புள்ளியுடன் முதலிடம் பெற் றார். அமெரிக்காவின் வெஸ்லே (12), உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் (12) அடுத்த இரு இடம் பெற்றனர். 18 சுற்றில் 4 வெற்றி, 3 'டிரா' செய்த குகேஷ் (5.5), 11ல் தோற்றதால் கடைசி இடம் (10) பிடித்தார்.ரேபிட், பிளிட்ஸ் என ஒட்டு மொத்தமாக கார்ல்சன் 22.5 புள்ளியுடன் சாம்பியன் ஆனார்.வெஸ்லே (20) 2வது இடம் பெற்றார். குகேஷிற்கு (19.5) மூன்றாவது கிடைத்தது. பிரக் ஞானந்தா (15) 9வது இடம் பெற்றார்.
செஸ் பெண்கள்
பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் ஜார்ஜியாவில் , 'டாப்-3' இடம் பெறுபவர்கள், உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கலாம்.இந்தியாவின் ஹம்பி, ஹரிகா, வைஷாலி, திவ்யா நேரடியாக இத்தொடரில் 'நாக் அவுட்' முறையிலான இரண்டாவது சுற்றில் பங்கேற்க உள்ளனர். முதல் சுற்றில் இந்தியாவின் பத்மினி, சீனாவின் லான்லின் ஜங்கை சந்தித்தார். பத்மினி, 56 வது நகர்த்தலில் முதல் போட்டியில் வென்றார். தொடர்ந்து 2வது போட்டியில் சாதித்த பத்மனி 2.0-0 என வென்று, அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.
0
Leave a Reply