வில்வித்தையில் 3வது தங்கம் வென்ற இந்தியாவின் ஹர்விந்தர் சிங்.
ஆசிய பாரா வில்வித்தை சீனாவின் பீஜிங் நகரில், மாற்றுத்திறனாளிகளுக்கான சாம்பியன் ஷிப் நடந்தது. ஆண்களுக்கான ரிகர்வ் ஓபன் பிரிவு பைனலில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங், தாய்லாந்தின் நெட்சிரி மோதினர்.
ஆண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையரில் தங்கம் வென்றிருந்த, ஹர்விந்தர் 7-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். இத்தொடரில் இவர் கைப்பற்றிய 3வது தங்கம். இத்தொடரில் 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண் கலம் என, 9 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, பதக்கப்பட்டியலில் 2வது இடம் பிடித்தது.
0
Leave a Reply