சென்னை எம்.சி.சி. -முருகப்பா தங்கக்கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டி
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் 96-வது அகில இந்திய ஹாக்கி , சென்னை எம்.சி.சி. -முருகப்பா தங்கக்கோப்பைக்கான போட்டி நாளை (வியா ழக்கிழமை) தொடங்குகிறது. 20-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 10 அணிகள் பங்கேற்கின்றன.
சிறப்பு அழைப்பின் பேரில் மலேசியா ஜூனியர் அணி , முதல் முறையாக. வெளிநாட்டு அணி ஒன்று பங்கேற்கின்றது. அணிகள் இருபிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரெயில்வே, இந்திய ராணுவம், என்.சி.ஓ.இ. (போபால்) மராட்டியம், தமிழ்நாடு அணியும், 'பி' பிரிவில் இந்தியன் ஆயில், மலேசியா ஜூனியர், இந்திய கடற்படை, கர்நாடகா மத்திய நேரடி வரிகள் வாரியம் (டெல்லி) அணியும் இடம் பிடித்துள்ளன .
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அணிகள் அரைஇறுதிக்கு முன் னேற ,லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்க வேண்டும். தொடக்க நாளான நாளை நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் மராட்டியம்-தமிழ்நாடு (மாலை 4.15 மணி) அணிகள் மோதுகின்றன. இதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு தொடங்கி மின்னொளியில் நடைபெறும் ஆட்டத்தில் கர்நாடகா-மத்திய நேரடி வரிகள் வாரியம் அணிகள் சந்திக்கின்றன .
இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசுக் கோப்பையுடன் ரூ.7 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.5 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்படும். இது தவிர சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான சைக்கிள் பரிசாக அளிக்கப்படும்.
0
Leave a Reply