இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் 10 விக்கெட் சாய்த்த ஆகாஷ் தீப்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் 10 விக்கெட் சாய்த்த ஆகாஷ் தீப்
பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா 587, இங்கிலாந்து 407 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 427/6 ரன்னுக்கு 'டிக்ளேர்' செய்தது. முதல் இன்னிங்ஸ் முன்னிலை (180 ரன்) சேர்த்து இங்கிலாந்துக்கு 608 ரன் என்ற கடின இலக்கை நிர்ணயித்தது. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 271 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. தொடர் 1-1என சமநிலையை எட்டியது.
கடந்த 58 ஆண்டுகளில் இங்கு ஏற்கனவே பங்கேற்ற 8 டெஸ்டில் 7ல் இங்கிலாந்திடம் தோற்றிருந்தது. ஒரு போட்டி 'டிரா' ஆனது. இளம் வீரர்களுடன் புதிய கேப்டன் சுப்மன் கில், வரலாற்றுசிறப்புமிக்கவெற்றியைத்தேடித்தந்துள்ளார். பர்மிங்ஹாம், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய அணி முதல் வெற்றி.ஆகாஷ் தீப், இரு இன்னிங்சி லும் சேர்த்து 10 விக்கெட் (4+6) சாய்த்தார். இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில், சிறந்த பந்துவீச்சை (10/187) பதிவு செய்தார்.
இந்திய அணி, அன்னிய மண்ணில் தனது'மெகா' வெற்றியை (336 ரன்) பதிவு செய்தது. இதற்கு முன் 2016ல் நார்த் சவுண்டில் நடந்த வெஸ்ட் இண்டீ சுக்கு எதிரான டெஸ்டில் 318 ரன் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இது, ஒட்டுமொத்தமாக இந்தியாவின் 4வது சிறந்த வெற்றியானது. மூன்றாவது டெஸ்ட் வரும் ஜூலை 10ல் லார்ட்சில் துவங்குகிறது.
தமிழ்நாடு கிரிக்கெட் போட்டியில் கோப்பை வென்ற திருப்பூர் அணி .
என்.பி.ஆர்., கல்லுாரிதிண்டுக்கல், நத்தம் மைதானத்தில் நேற்று நடந்த டி.என்.பி.எல்., பைனலில் திண்டுக்கல், திருப்பூர் அணிகள் மோதின. திருப்பூர் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 220 ரன் எடுத்தது. திண்டுக்கல் அணி 14.4 ஓவரில் 102 ரன் எடுத்து தோல்வியடைந்தது.
0
Leave a Reply