இந்தியாவுக்கு டேபிள் டென்னிசில் 3 பதக்கம்.
ஆசிய 'யூத்' டேபிள் டென்னிஸ் சாம்பியன் ஷிப் 29வது சீசன் உஸ்பெகிஸ்தானில், 15 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் அணிகளுக்கான பைனலில் இந்தியா, சீனா மோதின. சாஹில் ரவாத், ரித்விக் குப்தா, ஆதித்யா தாஸ் அடங்கிய இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. ஆசிய யூத் தொடரில் முதன்முறையாக வெள்ளி வென்று வரலாறு படைத்தது இந்தியா.
19 வயதுக்குட்பட்ட ஆண்கள் அணிகளுக்கான அரையிறுதியில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. அபினந்த் பிரதிவதி, அங்கூர் பட்டா சார்ஜீ, பிரியானுஜ் பட்டா சார்யா அடங்கிய இந்திய அணி 2-3 என போராடி தோல்வியடைந்து வெண்கலம் கைப்பற்றியது.
19 வயதுக்குட்பட்ட கலப்பு இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் அங்கூர் பட்டா சார்ஜீ, தனீஷா ஜோடி 2-3 என தென்கொரியாவின் கிம் கயோன், பார்க் கஹியோன் ஜோடியிடம் தோல்வியடைந்து வெண்கலம் வென்றது.
இது வரை இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 3 பதக்கம் கிடைத்துள்ளது.
0
Leave a Reply