விளையாட்டு போட்டிகள்.JULY 2ND
கால்பந்து
2026,மார்ச் 1/26ல் ஆஸ்திரேலியாவில்(12 அணிகள்) நடக்கவுள்ளபெண்களுக்கான ஆசிய கோப்பை கால் பந்து தொடரின். நடப்பு சாம்பியன் சீனா, தென்கொரியா,ஜப்பான், ஆஸ்திரேலியா என4 அணிகள் நேரடியாக பங்கேற்கின்றன. மீதமுள்ள 8 அணிகளை தேர்வு செய்ய, தகுதிச்சுற்று நடக்கிறது. 34 அணிகள், 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணி, ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.
தாய்லாந்து, மங்கோலியா, ஈராக், திமோர்-லெஸ்தே அணிகளுடன் இந்திய அணி'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. முதல் இரு போட்டியில் மங்கோலியா(13,0), திமோர்லெஸ்தே(4,0) அணிகளை வென்ற இந்தியா, நேற்று மூன்றாவது போட்டியில் இராக்கை எதிர்கொண்டது.
இந்திய அணி 5,0என்ற கோல் கணக்கில் இந்தியாவெற்றி பெற்றது. 3 போட்டியில் 9புள்ளியுடன் முதலிடத்தில் பட்டியலில் உள்ளது. ஜூலை 5ல் நடக்கவுள்ள கடைசி போட்டியில் தாய்லாந்தை(6) வென்றால்,22 ஆண்டுக்குப்பின் ஆசியகோப்பை தொடருக்கு தகுதி பெறலாம்.
வில்வித்தை,
ஆசிய 'பேர் பவ்' வில்வித்தை சாம்பியன் ஷிப்தாய்லாந்தின் பாங்காக்கில் இன்று துவங்கி. ஜூலை6 வரைநடக்கவுள்ளது. இத்தொடரில் ஜப்பான், இந்தியா, மலேசியா, சீனா உட்பட 13 நாடுகளை சேர்ந்த 407 பேர் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில்,சென்னையில் இருந்து தாய்லாந்துக்கு, சேலம், விநாயகா மிஷன் கல்லூரி மாணவர் சஞ்சய் உட்பட 7 பேர் கலந்து கொள்கின்றனர்.
துப்பாக்கி சுடுதல்,
டேராடூனில் நடந்ததுப்பாக்கி சுடுதல் தேசிய தகுதி போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அஞ்சும், சவுரப் சவுத்தரி, மெகுலி கோஷ் ஆகியோர் மீண்டும் தேர்வாகி இந்தியாவுக்காக விளையாட உள்ள னர்.
பாட்மின்டன்
இந்தியாவின் ஸ்ரீகாந்த் கனடா ஓபன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில்18-21, 21-19, 21-14 என்ற கணக்கில் சகவீரர் பிரியான்ஷு ரஜாவத்தை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
0
Leave a Reply