டென்னிஸ் ,& பளு தூக்குதல் .
டென்னிஸ்
திருச்சியில் தேசிய ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் பெண்கள் இரட்டையர் இறுதிப் போட்டி நேற்று நடந்தது.சென்னையின் தீப்தி வெங்கடேஷ், தனு ஸ்ரீ சதீஸ் ஜோடி, மேற்கு வங்காளத்தின் ரியா ராய், ' எந்திரக்ஷி பட்டாச்சார்யா ஜோடியை எதிர் கொண்டது. இதில் தமிழக ஜோடி, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் தமிழகத்தின் கோவர்தன் சுரேஷ், ஹர்ஷல் நிதன் ஜோடி, கர்நாடகாவின் இஷான் பதாகி, அர்ஜுன் சூரி ஜோடியிடம் 6-2, 4-6, 7-10 என்ற செட் கணக்கில் வீழ்ந்தது.
பளு தூக்குதல் .
, ஆசிய யூத், ஜூனியர் பளுதுாக்குதல் கஜகஸ்தானில், சாம்பியன் ஷிப் யூத் பெண்களுக்கான 44 கிலோ பிரிவில் , இந்தியாவின் புங்னிதாரா ,'ஸ்னாட்ச்' பிரிவில் 60, 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 81 என, மொத்தம் 141 கி.கி., பளுதுாக்கிய புங்னிதாரா, 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் அதிக பட்சமாக 81 கி.கி., பளு துாக்கிய அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த புங்னிதாரா 17, தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
0
Leave a Reply