கிராண்ட் செஸ் மூன்றாவது தொடரில் குகேஷ் பிரக்ஞானந்தாவை வென்றார் .
10வது சீசன் (மொத்தம் 3 தொடர்). கிராண்ட் செஸ் தொடரின் மூன்றாவது தொடர் குரோஷியாவில் நடக்கிறது.உலக சாம்பியன், இந்தியாவின்குகேஷ், பிரக்ஞானந்தா, நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் 10 பேர் பங்கேற்கின்றனர். முதலில் 'ரேபிட்' முறையில் போட்டி நடக்கிறது.
முதல் நாளில் 3 சுற்று நடந்தன. முதல் சுற்றில் குகேஷ், போலந்தின் ஜான்டுடாவிடம் தோல்வியடைந்தார். குகேஷ், அடுத்த சுற்றில் பிரான்சின் அலிரே சாவை வென்றார். 3வது சுற்றில் குகேஷ் - பிரக்ஞானந்தா மோதினார்.குகேஷ், 38 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
முதல் 3 சுற்று முடிவில் கார்ல்சன் (4.0), ஜான் டுடா (4.0), அமெரிக்காவின் வெஸ்லே (4.0), குகேஷ் (4.0) 'டாப் -4' இடங்களில் உள்ளனர். முதல் இரு சுற்றில் 'டிரா' செய்த பிரக்ஞானந்தா (2.0) கடைசி இடத்தில் (10) உள்ளார்.
ஜூனியர் செஸ்: இந்தியா 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம்7 பதக்கம் கைப்பற்றியது. இந்தியா அபாரம்
ஜார்ஜியாவில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக் கான உலக கோப்பை ஜூனியர் ,சர்வதேச செஸ் கூட்ட மைப்பு ('பிடே') சார்பில் ('கேடட்') தொடர் நடந்தது. 10 வயதுக்கு உட்பட்டோருக்கான ஓபன் பிரிவில் பைனலில் இந்தியாவின் சர்பர்தோ மானி தங்கப்பதக்கம் வென்றார்.
பெண்கள்பிரிவு.
(10 வயது) பைனலில் இந்தியாவின் திவி பிஜேஷ், சீனாவின் ஜிஹான் செனை வீழ்த்தி, தங்கம் கைப்பற்றினார். வெண்கலப் பதக்கத்துக் கான போட்டியில் இந்தியாவின் ஷர்வானிகா (தமிழகம்), ரஷ்யாவின் வோல்கோவாவை வென்றார்.
0
Leave a Reply