25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


கிராண்ட் செஸ் மூன்றாவது தொடரில் குகேஷ் தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கிராண்ட் செஸ் மூன்றாவது தொடரில் குகேஷ் தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்தார்.

 குரோஷியாவில் கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசன் (மொத்தம் 5 தொடர்) தற்போது மூன்றாவது தொடர். உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். முதலில் 'ரேபிட்' முறையில் போட்டி நடக்கிறது.

4, 5வது சுற்றில் குகேஷ், உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக், அமெரிக்காவின் பேபியானோவை வென்றார்.6வது சுற்றில் குகேஷ், கார்ல்சனை எதிர்கொண்டார். குகேஷ், துவக்கத்தில் பின் தங்கினார். 35வது நகர்த்தலில் கார்ல்சன் செய்த தவறை பயன்படுத்திய குகேஷ், ஆதிக்கம் செலுத்தினார்.வேறு வழியில்லாத நிலையில் 49 நகர்த்தலில் கார்ல்சன் தோல்வியை ஒப்புக் கொண்டார். இத்தொடரில் குகேஷ் தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்தார்.

முன்னதாக நடந்த பிரக்ஞானந்தா-கார்ல்சன் மோதல், 74வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. முதல் 6 சுற்று முடிவில் குகேஷ் (10 புள்ளி) முதலிடத்தில் உள்ளார். போலந்தில் ஜான் டுடா (8), அமெரிக்காவின் வெஸ்லே (7.0), கார்ல்சன் (6.0) அடுத்த 3 இடத்தில் உள்ளனர். பிரக்ஞானந்தா (5.0) 7வது இடத்துக்கு முன்னேறினார்.

செஸ் 

பெண்கள் உலக கோப்பையில் (ஜூலை 5-29) ஜார்ஜியாவில், இந்தியாவின் ஹம்பி, ஹரிகா, வைஷாலி, திவ்யா, பத்மினி ராத் உள்ளிட்ட 9 பேர் பங்கேற்கின்றனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News