' “கேலோ இந் தியா யூத்' விளையாட்டு 7வது சீசன் 200 மீ., ஓட்ட ம்.
“கேலோ இந் தியா யூத்' விளையாட்டு 7வது சீசன் பீஹாரில், நேற்று, நடந்த 200 மீ., ஓட்டத்தில் மஹாராஷ் டிராவின் பூமிகா (24.51 வினாடி) தங்கப்பதக்கம் வென்றார். ஹரியானாவின் பிரியா (24.62), ஆர்த்தி (24.94) அடுத்த இரு இடம் பிடித்து வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
ஒட்டுமொத்தமாக 56 தங்கம், 45 வெள்ளி, 48 வெண்கலம் என 149 பதக்கம் வென்ற மஹா ராஷ்டிரா, சாம்பியன் பட் டத்தை தட்டிச் சென்றது.
ஹரியானா 106 (35 தங்கம், 26 வெள்ளி, 45 வெண்கலம்), ராஜஸ்தான் 55 பதக்கத்துடன் (22, 11, 22) அடுத்த இரு இடம் பிடித்தன.
15 தங்கம், 20 வெள்ளி, 28 வெண்கலம் என 63 பதக்கம் வென்ற தமிழகம், பட்டியலில் ஐந்தாவது இடம் பிடித்தது.
0
Leave a Reply