திருச்சுழி மற்றும் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி மற்றும் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (30.05.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.
அதன்படி, திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், கீழகண்டமங்கலம் ஊராட்சி சித்தலக்குண்டு கிராமத்தில் ரூ.70 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும், அரசு உயர்நிலைப்பள்ளியின் கட்டுமான பணியினையும், வளமிகு வட்டார வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.7 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் பழுது பார்த்தல் மற்றும் மேற்கூரை அமைக்கப்பட்டு வரும் பணியினையும்,அதனை தொடர்ந்து, நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், வீரசோழன் ஊராட்சியில் ரூ.3.4 கோடி மதிப்பில் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட உள்ள 13 வகுப்பறை கட்டட கட்டுமான பணியினையும்,மேலும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் கொட்டகாட்சியேந்தல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.30 இலட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு வரும் பணியினையும்,பின்னர், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் இருஞ்சிறை கண்மாயில் ரூ.1.60 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டு வரும் பணியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, அரசின் மூலம் அந்தந்த ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா என பொதுமக்கள் மற்றும் பயனாளிகளிடம் கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
0
Leave a Reply