May 7 th விளையாட்டு போட்டிகள்
.கிரிக்கெட் பெண்கள்
பெண்களுக்கான முத்தரப்பு ஒரு நாள் தொடர் இலங்கையில்,. இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோதுகின்றன.
நேற்று இந்திய அணி தனது கடைசி லீக் போட்டி யில் தென் ஆப்ரிக்காவை எதிர்கொண்டது. தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 314/7 ரன் எடுத்து தோல்வியடைந்தது.
முடிவில் 4 போட்டியில் 3 வெற்றியுடன் 6 புள்ளி பெற்ற இந்திய அணி பைனலுக்கு (மே 11) முன் னேறியது.
வில்வித்தை
சீனாவின் ஷாங்காய் நகரில் உலக கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 சீனாவின் ஷாங்காய் நகரில் ,காம்பவுண்டு ஆண்கள் பிரிவில் அபிஷேக் வர்மா, ரிஷாப் யாதவ், ஓஜாஸ் பிரவின் இடம் பெற்ற இந்திய அணி நேரடியாக காலிறு தியில் பங்கேற்றது. இதில் பிரிட்டனை 239-232 என வீழ்த்தியது. அடுத்து நடந்த அரையிறுதியில் டென்மார்க்கை எதிர்
கொண்டது. முதல் இரு சுற்று முடி வில் 115-118 என பின் தங்கிய இந்தியா, கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட 232-231 என ' வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது.
பாட்மின்டன்
'சூப்பர் 300' சர்வதேச பாட்மின்டன் தொடர் சீனதைபேயில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சங்கர் முத்து சாமி மோதினர். ஸ்ரீகாந்த் 21-16, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-17, 21-18 என சீன தைபேயின் சியா ஹாவோ லீயை வீழ்த் தினார் .
இந்தியாவின் தருண் 21-17, 19-21, 21-12 என ஜப்பானின் ஷோகோ ஒகாவாவை தோற்கடித்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, அனுபமா உபத்யயா மோதினர்.உன்னதி 21-13, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.
0
Leave a Reply