இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா ,பெண்கள் பிரிமீயர் லீக் தொடருக்கான ஏலத்தில் ,உ.பி அணியில் ரூ.3.20 கோடிக்கு ஏலம் ஒப்பந்தமானார் .
பெண்களுக்கான பிரிமீயர் லீக் (டி- 20) 4-வது சீசன் ஓவர் கிரிக்கெட் போட்டிஅடுத்த ஆண்டு ஜனவரி 9-ந் தேதி முதல் பிப்ரவரி 5-ந் தேதி வரை நவிமும்பை மற்றும் வதோதராவில் நடக்க இருக்கிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் வீராங்கனைகள் ஏலம் நேற்று நடந்தது. ஏலப்பட்டியலில் 194 இந்தியர், 83 வெளிநாட்டவர், எனமொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்று இருந்தனர். பிரபல ஏலதாரர் மல்லிகா சாகர் ஏலத்தை நடத்தினார். போட்டியில் பங்கேற்கும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உள்பட 5 அணிகளும் தங்களுக்கு தேவையான வீராங்கனைகளை குறிவைத்து ஏலம் கேட்டனர்.
0
Leave a Reply