விளையாட்டு போட்டிகள் 18TH MARCH
டேபிள் டென்னிஸ்
இந்தியாவின் சுதிர்தா, ஸ்வஸ்திகா, தியா, மானுஷ் ஷா, ஸ்னேகித் ஆகியோருக்கு சென்னை 'ஸ்டார் கன்டென்டர்' (மார்ச் 25-30) தொடரில் 'வைல்டு கார்டு' சிறப்பு அனுமதி.
டென்னிஸ்
இந்தியாவின் ராம் குமார் ஸ்பெயினில் நடக்கும் ஐ.டி.எப்., தொடருக்கான தகுதிச் சுற்று முதல் போட்டியில் 4-6,6-7 என இத்தாலியின் ஜுவாரெசிடம் தோல்வியடைந்தார்.
கால்பந்து
‘ஐ-லீக்' போட்டி பஞ்சாப்பின் லூதியானாவில் நடந்தது. ‘கேரளா அணி 3-1 என, நாம்தாரி அணியை வீழ்த்தியது. கேரளா அணி (9 வெற்றி, 31 புள்ளி) 4வது இடத்தில் நீடிக்கிறது.
அபுதாகிர் பாரா பவர் லிப்டிங் தங்கம் வென்றார் .
இந்திய பாரா பவர் லிப்டிங் அமைப்பு சார்பில், உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில், 22வது சீனியர், 17வது ஜூனியர் தேசிய பாரா பவர் லிப்டிங் சாம்பின்ஷிப் நடக்கிறது.
இதில் தமிழகம் உட் பட 28 மாநிலத்தை சேர்ந்த, 280க்கும் மேற் பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர், தமிழகம் சார்பில் 30 பேர் விளையாடுகின்றனர்.
ஜூனியர் ஆண்களுக்கான 49 கிலோ பிரிவில் தமிழகத்தின் அபுதாகிர் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
0
Leave a Reply