100 வது ஆண்டு ஹாக்கி இந்தியா
100 வது ஆண்டு ஹாக்கி இந்தியா(எச்.ஐ.,) அமைப்பு 1925, நவ. 7ல், குவாலியரில் துவங்கப்பட்டது. இந்தி யாவில் துவக்கப்பட்ட முதல் தேசிய விளையாட்டு அமைப்பு இது. தற்போது நுாற்றாண்டு கொண்டாட்டம் துவங்கி யுள்ளது.இதை சிறப்பிக்கும் வகையில் ஆண்டு முழுவதும் பல்வேறு புதிய தொடர் கள் நடத்தப்பட உள்ளன.
ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் திலிப் டிர்கே கூறுகையில்,"திறமையானவர்களை கவுரவிக்க உள்ளோம். நமது வீரர்களின் அர்ப்பணிப்பு உணர்வுக்கு விருதுகள் ஊக்கம் அளிக்கும்.இந்திய ஹாக்கி வரலாற்றில் முதல் முறையாக ரூ.12 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது.சர்வதேச ஹாக்கி அமைப்பின் உறுப்பி னராக 1925ல் இந் தியா சேர்ந்தது. இதன் நுாற்றாண்டு விழாவையும் கொண்டாட உள்ளோம்," என்றார்.
ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய அணி ஒட்டுமொத்தமாக 13 பதக்கம் வென்றது.
8 / (1928, 1932, 1936, 1948, 1952, 1956, 1964, 1980) கைப்பற்றியது.
1960 வெள்ளி, 1968, 1972, 2021, 2024 என நான்கு முறை வெண்கலம் வென்றது.
0
Leave a Reply