இந்தியாவில், பெண்கள் கால்பந்து லீக் (ஐ.டபிள்யு.எல்.,) பாலா தேவி கோல்.
இந்தியாவில், பெண்கள் கால்பந்து லீக் (ஐ.டபிள்யு.எல்.,) பாலா தேவி கோல்
இந்தியாவில், பெண்கள் கால்பந்து லீக் (ஐ.டபிள்யு.எல்.,) 8வது சீசன் நடக்கிறது. கோல்கட்டாவில் நடந்த 8வது சுற்று லீக் போட்டியில் ஸ்ரீபூமி, சேது அணிகள் மோதின. இதில் ஸ்ரீபூமி அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஸ்ரீபூமி அணி சார்பில் பாலா தேவி 'கோல் (39, 49, 65வது நிமிடம்) அடித்தார். சேது அணிக்கு ஹதிஜா நந்தகோ (37 வது நிமிடம்), லிஷாம்பாபினா தேவி (89வது) தலா ஒரு கோல் அடித்து ஆறு தல் தந்தனர்.ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த மற்றொரு போட் டியில் நிடா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஹோப்ஸ் அணியை வென்றது.
ஸ்பெஷல் ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டில் இந்தியாவுக்கு 33 பதக்கம்.
இத்தாலியில், அறிவு சார் குறைபாடுள்ள வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற ஸ்பெஷல் ஒலிம்பிக் உலக குளிர்கால விளையாட்டு 12வது சீசன் நடந்தது. இதன் கடைசி நாளில் இந்தியாவுக்கு 3 வெள்ளி, 6 வெண்கலம் என, 9 பதக்கம் கிடைத்தது. இந்திய நட்சத்திரங்கள், 8 தங்கம், 18 வெள்ளி, 7 வெண்கலம் என, மொத்தம் 33 பதக்கம் வென்றனர்.
ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் ராஷ்மிகா-வைதேகி 'சாம்பியன்'
தாய்லாந்தில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர். இரட்டையர் பிரிவு பைனலில் இத்தொடரின் 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, வைதேகி சவுத்ரி ஜோடி, 'நம்பர்-2' ஆக உள்ள தாய்லாந்தின் புனின், ஜாப்பானின் யூகி நைட்டோ ஜோடியை எதிர்கொண்டது. ஒரு மணி நேரம், 20 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 6-4, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.
கால்பந்து 'ஐ-லீக்' போட்டி
'ஐ-லீக்' போட்டி ஜெய்ப்பூரில் நடந்த ராஜஸ்தான் அணி 4-0 என ஷில்லாங் லஜோங் அணியை வீழ்த்தியது. ராஜஸ்தான் 27 புள்ளியுடன் (7 வெற்றி) 5வது இடத்துக்கு முன்னேறியது.
பாட்மின்டன்
சீனாவின் ஜின் வா குவோ, பாங் ஹுய் சென் ஜோடி ,ஆல் இங்கிலாந்து ஓபன் பைனலில் 21-16, 10-21, 23-21 என சக நாட்டை சேர்ந்த யான் ஷே பெங், யா ஜின் வெய் ஜோடியை வென்றது.
T20 கிரிக்கெட் பெண்கள்.
மும்பையில் நடந்த பெண்கள் பிரிமியர் லீக் (டபிள்யு.பி.எல்.,) 3வது சீசனுக்கான பைனலில் மும்பை அணி (149/7), 8 ரன் வித்தியாசத்தில் டில்லியை (141/9) வீழ்த்தி, கோப்பை வென்றது. இது, உலகின் பல்வேறு பகுதி களில் நடக்கும் 'டி-20' லீக் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைத்த 12வது கோப்பை.
0
Leave a Reply