விளையாட்டு போட்டிகள்.15th MARCH
சைக்கிளிங்: இந்தியா தேசிய சாதனை.
துருக்கியின் கொன்யா நகரில் யு.சி.ஐ., டிராக் நேஷன்ஸ் கோப்பை சைக்கிளிங் தொடர் நடக்கிறது. முதல் நாளான நேற்று ஆண்கள் அணிகளுக்கான டீம் ஸ்பிரின்ட் பிரிவில் தகுதிச்சுற்று நடந்தது.
இதில் 16 அணிகள் பங்கேற்றன. டேவிட் பெக்ஹாம், எசோவ் ஆல்பன், ரோஜித் சிங் இடம் பெற்ற இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி 44.187 வினாடி நேரத்தில் வந்து, 11வது இடம் பிடித்து, பைனல் வாய்ப்பை இழந்தது.
எனினும் இந்திய ஆண்கள் அணிக்கு இது புதிய தேசிய சாதனை(43.302) ஆனது. முன்னதாக இந்திய அணி,44.451 வினாடி நேரத்தில் வந்து இருந்தது.
ஸ்பெஷல் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 13 பதக்கம்.
இத்தாலியில், அறிவு சார் குறைபாடுள்ள வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் ஸ்பெஷல் ஒலிம்பிக் உலக குளிர்கால விளையாட்டு 12வது சீசன் நடக்கிறது. நேற்று நான்கா வது நாள் போட்டி நடந்தன .
ஆல்பைன் ஸ்கீயிங் 'எம் 04' பிரிவில் இந்தியாவின் தீபக் தாகூர் தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இப்பிரிவில் தங்கம் கைப்பற்றிய முதல் இந்தியர் ஆனார். ஆல்பைன் ஸ்கீயிங் 'எம் 05' பிரிவில் கிரிதர், தங்கம், வசப்படுத்தினார். இந்த இரு பிரிவிலும் இந்தியா வின் அபிஷேக் குமார், ராதா தேவி வெள்ளி வென்றனர்.
நேற்று 'ஸ்னோஸ்ஷூ யிங்(பனிச்சறுக்கு) போட் டிகளில் இந்தியாவுக்கு 2 தங்கம்,3 வெள்ளி,1 வெண்கலம் என 6 பதக்கம் கிடைத்தன.50 மீ., எம் 03 பிரிவில் வாசு திவாரி தங்கம் வென்றார். 200 மீ., எம் 12 பைனலில் அசத்திய அனில் குமார், தங்கம் வசப்படுத்தினார்.
இதுவரை இந்தியாவுக்கு 8 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கம் கைப்பற்றியுள்ளது.
பாட்மின்டன் இந்தியா ஏமாற்றம்,
இங்கிலாந்தின் பர்மிங் ஹாமில் ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண் கள் ஒற்றையர் காலிறுதி யில், உலக தரவரிசையில் 15வது இடத்திலுள்ள இந்தியாவின் லக்சயா சென்.'நம்பர் -6' வீரரான சீனாவின் ஷி பெங்லியுடன் மோதினார்.
முதல் செட்டை லக் சயா சென், 10-21 என இழந்தார்.இரண்டாவது செட்டில் போராடிய போதும், 16,21 என கோட்டை விட்டார். முடிவில் லக்சயா சென் 10–21, 16–21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார்.
0
Leave a Reply