விளையாட்டு போட்டிகள் 13th MARCH
பாட்மிண்டன்
இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் தொடர் இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில். பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 16 வது இடத்திலுள்ள இந்தியாவின் சிந்து, 21வது இடத்திலுள்ள தென் கொரியாவின் காயுன் கிம்மை எதிர்கொண்டார். முதல் செட்டை சிந்து 21-19 என கைப்பற்றினார். அடுத்த செட்டை 13-21 என மோசமாக இழந்தார். முடிவில் சிந்து 21-19, 13-21, 13-21 என்ற செட் டில் அதிர்ச்சி தோல்விய டைந்தார்.
மாற்றுத் திறனாளி நட்சத்திரங்கள் பங்கேற்கும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்
உலக பாரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் டில்லியில் . மாற்றுத் திறனாளி நட்சத்திரங்கள் பங்கேற்கும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப், வரும் செப்டம்பர் மாதம் டில்லியில் நடக்க உள்ளது. இதற்கு முன்னோட்டமாக, உலக பாரா கிராண்ட் பிரிக்ஸ் தடகளம், முதன் முறையாக டில்லியில் நடக்கிறது
நேற்று ஆண்களுக்கான 400 மீ., டி 54 பிரிவு (வீல் சேர் ரேசிங்) போட்டியின் பைனல் நடந்தது. இந்தி யாவின் ஜோதி மணிகண்டன் ஒரு நிமிடம், 04.56 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்தார். தமிழகத்தை சேர்ந்த இவருக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. மற்றொரு இந்திய வீரர் மனோஜ்குமார் சபாபதி (தமிழகம்), ஒரு நிமிடம், 04.85 வினாடி நேரத்தில் வந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இருவர் மட்டுமே பங்கேற்ற பார்வைத்திறன் குறைந்த, பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் லலிதா (ஒரு நிமிடம், 07.59 வினாடி), ஷாலினி (ஒரு நிமிடம், 21.53 வினாடி ) தங்கம், வெள்ளி கைப்பற்றினர்.
ஸ்குவாஷ்
இந்திய ஓபன் தொடர் மும்பையில் மார்ச் 24-28ல் நடக்க உள்ளது. இதில் வேலவன், அனாஹத் சிங், ரமித் டான்டன் உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.
உலக குளிர்கால விளையாட்டில் இந்தியாவுக்கு 4 பதக்கம்,
ஸ்பெஷல் ஒலிம்பிக் உலக குளிர்கால விளையாட்டு, 12வது சீசன் இத்தாலியில், 102 நாடுகளை சேர்ந்த, சுமார் 1500 அறிவுசார் குறைபாடு உள்ள வீரர், வீராங்கனைகள், 8 வகை யான விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 30 விளையாட்டு நட்சத்திரங்கள், 19 பயிற்சியாளர் குழுவினர் என, 49 பேர் சென்றுள்ளனர்.இதன் 'ஸ்னோபோர் டிங்' விளையாட்டுக்கான 'நோவைஸ் ஜெயன்ட் ஸ்லாலோம்-எப்13' பிரிவு பைனலில் இந்திய வீரர் சமீர் யாதவ், தங்கம் வென்றார்.
0
Leave a Reply