விளையாட்டு போட்டிகள் 14th MARCH
இங்கிலாந்தின் பர்மிங் ஹாமில் ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் தொடர் காலிறுதியில் லக்சயா சென்.
இங்கிலாந்தின் பர்மிங் ஹாமில் ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் தர வரிசையில் 15வது இடத்திலுள்ள இந்தியாவின் லக்சயா சென்,'நம்பர்-2'வீரரான இந் தோனேஷியாவின் ஜோனா தன் கிறிஸ்டியுடன் மோதினார்.
முதல் செட்டை லக்சயா 21,13 எனகைப் பற்றினார். தொடர்ந்து அசத்திய இவர் அடுத்த செட்டையும் 2110 என எளிதாக வசப்படுத்தினார். 36 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் லக்சயா 21,13,21,10 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.
ஜோனாதன் கிறிஸ்டிக்கு எதிராக லக்சயா பெற்ற 3வது வெற்றி (4 தோல்வி) இது. அடுத்து காலிறுதியில் சீனாவின் ஷி பெங்லியை ('நம்பர்-6) சந்திக்க உள்ளார்.
மாற்றுத் திறனாளி நட்சத்திரங்கள் பங்கேற்கும் உலக பாராதடகளத்தில் இந்தியா கலக்கல்,
மாற்றுத் திறனாளி நட்சத்திரங்கள் பங்கேற்கும் உலக பாராதடகள சாம்பியன்ஷிப், வரும் செப்டம்பர் மாதம் டில்லியில் நடக்க உள்ளது. இதற்கு முன்னோட்டமாக, உலக பாரா கிராண்ட் பிரிக்ஸ் தடகளம், முதன் முறையாக டில்லியில் நடந்தது. 19 நாடுகளில் இருந்து 280 பேர்பங்கேற்றனர். இந்தியா சார்பில் 145 பேர்களமிறங்கினர்.
நேற்று கடைசி நாள்போட்டி நடந்தது. ஆண்களுக்கான 800 மீ., வீல் சேர்ரேசிங் 'டி 54) பிரிவு பைனல் நடந்தது. இந்தியாவின் ரமேஷ் சண்முகம், ஒரு நிமிடம், 50.85 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித் தார். தமிழகத்தை சேர்ந்த இவர், தங்கம் வென்றார்.
இந்தியா 45 தங்கம், 40 வெள்ளி, 49 வெண்கலம் என மொத்தம் 134 பதக்கம் கைப்பற்றி, பட்டியலில் முதலிடம் பிடித்தது.
இந்தியாவுக்கு குளிர்கால ஸ்பெஷல் ஒலிம்பிக்கில் 5 பதக்கம்.
இத்தாலியில், அறிவுசார் குறைபாடுள்ள வீரர்,வீராங்கனைகள் பங்கேற்கும் ஸ்பெஷல் ஒலிம்பிக் உலக குளிர்கால விளையாட்டு 12வது சீசன் நடக்கிறது. இதன் 'ஸ்னோபோர்டிங்' விளையாட்டுக்கான 'நோவைஸ் ஜெயன்ட் ஸ்லாலோம்எப்25'பிரிவு பைனலில் இந்திய வீராங்கனை பாரதி, தங்கம் வென்றார். இது,இத்தொடரில் பாரதி கைப்பற்றிய 2வதுதங்கம். ஏற்கனவே இவர்,'நோவைஸ் ஜெயன்ட்ஸ்லா லோம்,எப்14' பிரிவில்,'ஆல்பைன் ஸ்கீயிங்எப்6' பிரிவு பைனலில் இந்திய வீராங்கனை நிர்மலா தேவி தங்கப்பதக் கத்தை தட்டிச் சென்றார்.
'ஆல்பைன் ஸ்கீயிங்,எப்6' பிரிவு பைனலில் இந்திய வீராங்கனை நிர்மலா தேவி தங்கத்தை வென்றார்.
இந்தியாவுக்கு இத்தொடரில் 4 தங்கம், 4 வெள்ளி, ஒருவெண்கலம் என 9 பதக்கம் கிடைத்துள்ளது.
0
Leave a Reply