உலக அளவில் 'நம்பர்-4' வீரர் ஆனார் குகேஷ். இந்தியாவின் 'நம்பர்-1' வீரரானார் .
நெதர்லாந்தில் சர்வதேச செஸ் மாஸ்டர்ஸ் பிரிவின் ஐந்தாவது சுற்றில் இந்தியாவின் குகேஷ், ஜெர்மனியின் வின்சென்ட்டை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், 72வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இத்தொடரில் இவர் பெற்ற இரண்டாவது வெற்றி இது.
ஐந்து சுற்று முடிந்த நிலையில்,நேற்று சர்வ தேச செஸ் கூட்டமைப் பின் ('பிடே') 'லைவ்' ரேட்டிங் பட்டியல் வெளியானது. உலக சாம்பியன் குகேஷ், 2784 புள்ளியுடன் இந்தியாவின் 'நம்பர்-1' வீரரானார். உலக அளவில் 'நம்பர்-4' வீரர் ஆனார். நெதர்லாந்து தொடரில் 2 வெற்றி (3 'டிரா') பெற்றதால் 7 புள்ளி கூடுதலாக பெற, இந்த முன்னேற்றம் கிடைத்தது.
0
Leave a Reply