விளையாட்டு போட்டிகள் பாட்மின்டன், டென்னிஸ், டேபிள் டென்னிஸ்.
கலப்பு இரட்டையர் வியட்நாம் ஓபன் பாட்மின்டன் தொடர் முதல் சுற்றில் இந்தியாவின் சதிஷ் கருணாகரன், ஆத்யா ஜோடி 21-12, 21-11 என்ற நேர் செட்டில் இந்தியாவின்இஷான், ஆராதனா ஜோடியை வென்றது.
ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர்சீனாவின் குவாங்சுவில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில், இந்தியாவின் ராம்குமார் ராமநாதன்,1-6, 4-6 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் நிதேஷிடம் வீழ்ந்தார்.
டில்லியில் தேசிய டேபிள் டென்னிஸ் தொடர் இன்று ஆண்கள் பிரிவில் 256 பேர் பங்கேற்க உள்ளனர். தேசிய சாம்பியன் மனுஷ் ஷா விலகியதை அடுத்து, அன்குர் பட்டாச்சார்ஜீக்கு 'நம்பர்-1' அந்தஸ்து கொடுக்கப்பட்டது. 128 பேர் பெண்கள் பிரிவில் களமிறங்குகின்றனர். 'நம்பர்-1' வீராங்கனையாக தியா சிட்டாலே களமிறங்குகிறார்.
0
Leave a Reply