யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிசில்கோப்பை வென்றார் அல்காரஸ்.
யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்நியூயார்க்கில், ஆண்கள்ஒற்றையர் பிரிவு பைனலில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 22, இத்தாலியின்ஜானிக் சின்னர் 24, மோதினர். முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றிய அல்காரஸ், 2வது செட்டை 3-6 என இழந்தார். பின் எழுச்சி கண்ட இவர், அடுத்த இரு செட்களை 6-1, 6-4 என தன்வசப்படுத்தினார்.
இரண்டு மணி நேரம், 42 நிமிடம் நீடித்த போட்டியில் அல்காரஸ் 6–2, 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, யு.எஸ்., ஓபனில் 2வது முறையாக கோப்பை வென்றார். சாம்பியன் அல்காரசிற்கு ரூ. 44 கோடி, 2வது இடம் பிடித்த சின்னருக்கு, ரு. 22 கோடி பரிசு வழங்கப்பட்டது.
0
Leave a Reply