இன்று முதல் ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழா ஆரம்பமாகிறது.
ஆசிய கோப்பை 'டி-20' தொடர் (செப்.9-28) ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்க உள்ளது. இந்தியா, இலங்கை உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல காத்திருக்கிறது.
ஏ' பிரிவு: இந்தியா, ஓமன், பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.
'பி' பிரிவு: இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங்.
ஒவ்வொரு அணியும், லீக் சுற்றில் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதும்.12 போட்டி முடிவில் இரு பிரிவிலும் முதலிடம் பெறும் தலா இரு அணிகள் 'சூப்பர்- 4' சுற்றுக்கு முன்னேறும்.
ஒவ்வொரு அணியும், மீண்டும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை 'சூப்பர்-4' சுற்றில் மோதும். 6 போட்டி முடிவில் செப். 28ல் நடக்கும் பைனலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் மோதும்.
0
Leave a Reply