இந்தியாவின் நிஹாத் ஜரீன் குத்துசண்டை உலக சாம்பியன்ஷிப்பில் காலிறுதிக்கு முன்னேறினார்.
உலக குத்துசண்டை சாம்பியன் ஷிப் தொடர் இங்கிலாந்தின் லிவர் பூல் நகரில், இந்தியா சார்பில் 20 பேர் உட்பட, 65 நாடுகளில் இருந்து, 550 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.
இந்தியாவின் நிஹாத் ஜரீன், ஜப்பானின் நிஷினகா யுனாவை பெண்களுக்கான 51 கிலோ எடைப் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் எதிர்கொண்டார். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய நிஹாத், 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட, காலிறுதிக்கு முன்னேறினார்.
ஸ்காட்லாந்தின் ஹிக்கேயிடம் இந்திய வீராங்கனை நீரஜ் போகத் (65 கிலோ), 2-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.
0
Leave a Reply