25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


 'கேலோ இந்தியா யூத்' விளையாட்டுபோட்டிகள்  .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

 'கேலோ இந்தியா யூத்' விளையாட்டுபோட்டிகள்  .

'கேலோ இந்தியா யூத்' விளையாட்டு 7வது சீசன்,பீஹாரில்,  துப்பாக்கி சுடுதல், சைக்கிள் பந்தயம், ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள் மட்டும் டில்லியில் நடக்கின்றன.

துப்பாக்கி சுடுதல் .

நேற்று, டில்லியில் நடந்த துப்பாக்கி சுடுதல் கலப்பு அணிகளுக்கான 10 மீ.,'ஏர் பிஸ்டல்' பிரிவு பைனலில் ராஜஸ்தானின் பிராச்சி, மயங்க் சவுத்ரி ஜோடி, உ.பி.,யின் தேவ் பிரதாப், உர்வா சவுத்ரி ஜோடியை சந்தித்தது. போட்டி 15,15 என 'டை' ஆனது. பின் 'ஷூட் அவுட் முறையில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி, இம்முறை முதல் தங்கத்தை கைப்பற்றியது..மூன்றாவது இடத்துக்கான போட்டியில் டில்லியின் ஹர்திக் பன்சால், நியாமிகா ராணா ஜோடி 1614 என ஹரியானாவின் பிரதிக் ஷியோகன்ட், கனக் ஜோடியை வீழ்த்தி வெண்கலம் வென்றது.

நீச்சல் போட்டி.

நீச்சல் போட்டியில் கர்நாடகா நட்சத்திரங்கள்,. நேற்று வழங்கப்பட்ட 7 தங்கப்பதக்கத்தில்,4 தட்டிச் சென்றனர். மஹாராஷ்டிரா, கேரளா, அசாம் அணிகளுக்கு தலா ஒரு தங்கம் கிடைத்தன..

ஆண்களுக்கான வில்வித்தை

ஆண்களுக்கான வில்வித்தை தனிநபர் 'ரிகர்வ்' பிரிவு அரையிறுதியில் தமிழகத்தின் ஸ்மரன் சர்வேஷ் 6,2 என, உ.பி.,யின் விஷுவை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News