உதட்டை சிவப்பாக மாற்ற....
...கருமை நிற உதடுகளை இளஞ்சிவப்பு நிற உதடாக மாற்ற. கொஞ்சம் பராமரிப்பு கூடுதல் கவனம் இருந்தால் அழகான உதடுகளை பெற்று விடலாம். இளவயதினர் வெகு அரிதாகவே இந்த பாதிப்புக்கு ஆளானாலும் வயது அதிகமாகும் போது பெண்களும் இருண்ட கருமையான உதடுகளை பெறுகிறார்கள்.
ஸ்ட்ராபெர்ரி நிறமே கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அழகானது. ஸ்ட்ராபெர்ரி சாறுடன் பெட்ரோலியம் ஜெல்லி கலந்து நன்றாக கலக்க வேண்டும். இதை தினமும் இரவு தூங்கும் போது இதை உதட்டில் தடவி வந்தால் உதட்டின் நிறம் மாறும்.
சிட்ரஸ் நிறைந்த எலுமிச்சை சாறு சருமத்துக்கு சமயங்களில் எரிச்சலை உண்டாக்கும். எனினும் இதை நீர்த்து அல்லது எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தினால் பலன் கிடைக்கும். எலுமிச்சை சாறு அரை டீஸ்பூன் உடன் ஆலிவ் என்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கலந்து நன்றாக கலக்கவும். இதை உதட்டின் மீது தடவி நன்றாக உலரும் வரை வைத்திருந்து பிறகு மீண்டும் இந்த கலவையை மேல் அடுக்கில் தடவவும்.
நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் உதட்டை கழுவ வேண்டும். எலுமிச்சை இயற்கை சுத்தப்படுத்தியாக இருப்பதால் இது கறைபடிந்த உதடுகளை வெண்மையாக்க செய்கிறது. ஆலிவ் எண்ணெய் உதட்டை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது.
0
Leave a Reply