உருளைக்கிழங்கு சிப்ஸ் வெள்ளை வெளேரென்று கரகரப்பாக இருக்க.....
உருளைக்கிழங்கைச் சீவி ஒரு வெள்ளைத் துணியில் கட்டி கொதிக்கும் நீரில் ஐந்து நிமிடம் அமிழ்த்தி வைத்து எடுத்து பிறகு குளிர்ந்த உப்பு தண்ணீரில் போட்டு கொதிக்கும் எண்ணெயில் போட்டு வறுத்து எடுத்தால் வெள்ளை வெளேரென்று சிப்ஸ் கரகரப்பாக இருக்கும்.
கோடை காலத்தில் இட்லி மாவு புளிக்காமல் இருக்க மாவு அரைத்துவைத்தவுடன்,அதில்தேவையான அளவு உப்பு போட்டு கலந்த பிறகு. அதனுடன் 1 வெற்றிலையை காம்புடன் போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு செய்த பிறகு, நீங்கள் மாவினை வழக்கம் போல பிரிடஜில் வைத்து விடுங்கள் .இந்த முறையில் செய்தால் இட்லி மாவுகோடைகாலத்தில் புளிக்காது.
பருப்பை சேகரித்து வைத்திருக்கும் பாத்திரத்தில் நாலைந்து காய்ந்த மிளகாயைப் போட்டு வையுங்கள். பருப்பு நிறம் மாறவோ, பூஞ்சை பிடிக்காவோ செய்யாது.
அடுப்பு, சமையல் மேடை, அடுப்பின் பின்புறம் என எல்லா இடங்களிலும் எண்ணெய் பிசுக்கு ஒட்டி இருந்தால், டைல்ஸை சாதாரண துணியால் துடைத்த பின் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சலவைச் சோடாவைக் கலந்து பிசுக்கு பிடித்த இடங்களில் பூசிவிட்டு, உலர்ந்த துணியால் துடைத்தால் பளிச்சென்று மின்னும்.
உப்பு ஜாடியில் சிறிதளவு சோள மாவைப் போட்டுவைத்தால், உப்பு நீர்த்துப்போகாமல் இருக்கும் .
0
Leave a Reply