கோதுமை மாவில் பரோட்டா செய்ய.....
கோதுமை மாவில் பரோட்டா செய்யும்போது ஒருடேபிள்ஸ்பூன் ஓமம் கலந்து செய்யலாம். சுவையாகவும் எளிதில் ஜீரணமும்ஆகும்.
சுட்ட அதிரசங்களை சேகரித்துவைக்கும்போது, டப்பாவின் அடியில் கிச்சன் டிஷ்யூஸ் வைத்து, அதன்மீது அதிரசங்களை அடுக்கினால் உபரி எண்ணெயை டிஷ்யூ பேப்பர் இழுத்துக்கொள்ளும். சுவையும் மாறாமல் இருக்கும்.
சாம்பாரில் தக்காளியை நறுக்கி போடுவதை விடமிக்ஸியில் அரைத்துப் போட்டால் ருசி தனியாக தெரியும். வாழைப்பழம் அல்லது வாழைத்தண்டை நறுக்கியவுடன் மோர் கலந்த தண்ணீர் போட்டு பயன்படுத்தினால் துவர்ப்பு தன்மை அகன்றுவிடும்.
கொஞ்சம் மசாலாப் பொடியை சேர்த்து தக்காளி சாதம் தயாரித்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
வாடிய பீன்ஸை சிறிது நேரம் குளிந்த தண்ணீரில் போட்டு எடுத்து பிறகு சமையல் செய்தால் வாடாத பீன்ஸை போலவே இருக்கும்.
0
Leave a Reply