சப்பாத்தி பிசையும்போது.....
சப்பாத்தி மாவு பிசையும் போது சிறிதளவு அரிசி மாவையும் சேருங்கள். சப்பாத்தி அதிக மென்மையாக இருக்கும்.
சப்பாத்தி பிசையும்போது அதில் எண்ணெய் சேர்ப்பதற்கு பதில், வெண்ணெய் சேருங்கள். சப்பாத்தி அதிக ருசி தரும்..
துவையல் தேவைக்கு அதிகமாக இருந்தால், குறிப்பிட்ட அளவில் தோசை மாவை எடுத்து ,அதில் துவையலை கலக்கி தோசையாக சுட்டு விடுங்கள். தோசை வித்தியாசமான ருசி தான்
தோசை ஊற்றும் போது சுண்டுவதாய்த் தெரிந்தால், கல்லில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி ஒரு சிட்டிகை உப்பையும் போட்டுக் கல்லைத் தேய்த்துவிட்டு பிறகு ஊற்றினால் தோசை சரியாக வரும்.
பிளாஸ்டிக் சாமான்களில் வரும் நாற்றத்தைப் போக்க ,உப்பு கலந்த நீரினால் நன்றாகக் குலுக்கிக் கழுவினால் நாற்றம் தானாய்ப் போய்விடும்.
0
Leave a Reply