சர்க்கரை வள்ளிக்கிழங்கை அடை செய்ய...
சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேறு விதமாக சமைத்து சாப்பிட விரும்புபவர்கள், சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து, அடைமாவில் சேர்த்துப் பிசைந்து அடை செய்து சாப்பிடலாம்.
மழை, குளிர் காலங்களில்வடகம் நமத்து நன்றாகப் பொரியாது வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி ,அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண் ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்..
கருவாட்டை சிறிதளவு தண்ணீருடன் மண் சட்டியில் போட்டு உருட்ட வேண்டும். பின்சுடுதண்ணீரை ஊற்றி நன்றாக கழுவினால் கருவாட்டில் உள்ள அதிகமான உப்பு நீங்கிவிடும்.
பாசிபருப்பு பாயாசம் செய்யும் போது வெல்லத்தை ,கெட்டிபாகாக காய்ந்தபின் செய்தால் ,பாயாசம் ரு சியாக இருக்கும். மறுநாள் இருத்தாலும், ஊசிப் போகாது.
துவரம் பருப்பை வேக வைக்கும் போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால், சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.
0
Leave a Reply